27.1 C
Chennai
Saturday, May 24, 2025
267 8794
ஆரோக்கிய உணவு

உணவுக்கு பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளிலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

 

வீடுகளில் கூட, நம் தாத்தா, பாட்டி, சில சமயங்களில் நம் தாய், தந்தையரிடம் கூட உணவுக்குப் பிறகு வெற்றிலை மெல்லும் பழக்கம் இருக்கும்.

 

குறிப்பாக, விருந்து உணவு எடுத்துக் கொள்ளும் சமயங்களில், இதை அவர்கள் கட்டாயமாக கடைப்பிடிப்பார்கள்.

 

உண்மையில் வெற்றிலை உணவுக்கு பின் எடுத்து கொள்வது பல நன்மைகளை தருகின்றது. தற்போது அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.

 

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணியாக வெற்றிலை இருக்கிறது. இந்த சிக்கல் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் வெற்றிலை மெல்ல வேண்டும். இது வயிற்றில் உள்ள பிஹெச் அளவை சமநிலையில் வைக்கும். இதனால், மலச்சிக்கல் கட்டுப்படுத்தப்படும்.
வெற்றிலை மெல்லும்போது வாயில் எச்சில் அதிகம் சுரக்கிறது. இது உணவுப் பொருட்களை உடைத்து செரிமானம் செய்ய உதவும். இதனால், ஜீரண மண்டலத்தில் உள்ள தேவையற்ற அழுத்தம் குறைகிறது.
நாள் ஒன்றுக்கு ஒரு வெற்றிலையாவது நீங்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும். மேலும் பிஹெச் அளவு சமநிலை அடைகிறது. இதன் விளைவாக பசி அதிகரிக்கும்.
மூச்சுத்திறன் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெற்றிலை மீது கடுகு எண்ணெய் சேர்த்து, லேசாக வாட்டி எடுத்து மார்பு பகுதியில் வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.
வெற்றிலையில் ஆன்டிபயாடிக்ஸ் நிரம்பியுள்ளது. இது உடலில் இருமல் தொந்தரவுகளை போக்குவதற்கு உதவிகரமாக இருக்கும். தொடர் இருமலால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும்.

Related posts

மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள்

nathan

வெயிலுக்கு மோர்தான் பெஸ்ட்!

nathan

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..?

nathan

உங்களுக்கு தெரியுமா இட்லி மாவுக்குள் இத்தனை மர்மங்களா?

nathan

வீட்டு/சமையல் குறிப்புகள்

nathan

கறிவேப்பிலை சாறு

nathan

தினமும் முளைக்கட்டிய பயிரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கங்க…

nathan

காளான் மசாலா

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan