35.8 C
Chennai
Monday, Jun 17, 2024
sl3716
ஐஸ்க்ரீம் வகைகள்

சோயா – ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்

என்னென்ன தேவை?

சோயா தானியம் – 1/2 கப்,
ஸ்ட்ராபெரி பழம் – 6,
ஸ்ட்ராபெரி எசென்ஸ் – 2 சொட்டு,
சர்க்கரை – 4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சோயா தானியத்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்து, வடிகட்டி, காய்ச்சி நன்கு ஆறவிடவும். ஸ்ட்ராபெரி பழங்களை மிக்ஸியில் போட்டு கூழாக்கவும். காய்ச்சிய பாலில் ஸ்ட்ராபெரி கூழ், ஸ்ட்ராபெரி எசென்ஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அதை ஒரு மூடிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஃபிரிட்ஜில் ஃப்ரீசரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து இக்கலவையை மீண்டும் எடுத்து மிக்ஸியில் அடிக்கவும். மீண்டும் அதே பிளாஸ்டிக் டப்பாவில் இக்கலவையை நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும். 3 முறை இதேபோல் செய்யவும். இப்படி செய்தால் ஐஸ்க்ரீம் நன்கு மிருதுவாக வரும். இதை கப்புகளில் வைத்து, ஸ்ட்ராபெரி பழத்தால் அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

sl3716

Related posts

பிரெட் குல்ஃபி

nathan

ஃபிரைடு ஐஸ்கிரீம்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க! அதிக சத்துக்கள் உள்ளன.

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

nathan

சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்

nathan

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan

நியூட்ரெலா ஐஸ்க்ரீம்

nathan