வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி உடலைச் சுத்தப்படுத்தும் சக்திவாய்ந்த உணவு பொருள்.
வெங்காயத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.
இது மிக எளிதில் உடல் உறிஞ்சிக் கொண்டு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
அனீமியா என்னும் ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து வருவதால் ரத்த சோகை தீர்ந்து ஹமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
இந்த பழத்தின் தோலை மட்டும் வீசிடாதீங்க! கொழுப்பை ஓட ஓட விரட்டும் சக்தி வாய்ந்த டீ போடலாம்
தொப்பை குறைக்கும் வெங்காயம்
உடலில் கொலஸ்டிரால் அளவு அதிகரிக்க அதிகரிக்க அது உடலின் உள்ளுறுப்புகளிலும் படிய ஆரம்பிக்கும்.
அது கொஞ்சம் கொஞ்சமாக உறுப்புகள் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவையும் குறைக்கும்.
திருமணமான ஆண்கள் மாப்பிள்ளை சம்பா சாதம் சாப்பிட்டால் என்ன நடக்கும்
தினமும் 4 சின்ன வெங்காயம்
தினசரி உணவோடு பச்சையாக 4 சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வாருங்கள்.
அது அடிவயிற்றில் தேங்கியிருக்கிற கொழுப்பைக் கரைத்துத் தொப்பையைக் குறைக்கும்.
பெரிய வெங்காயத்தைக் கூட சாப்பிடலாம். இரண்டு வெங்காயத்திலும் ஒரே மாதிரியான பலன்கள் தான் இருக்கின்றன.
ஆனால் சின்ன வெங்காயத்தில் சல்பரின் அளவு அதிகம்.