என்னென்ன தேவை?
எண்ணெய் / நெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 5 மெல்லியதாக வெட்டப்பட்டது
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – 4 துண்டாக்கப்பட்டது
தக்காளி – 1 பெரியதாக வெட்டப்பட்டது
முருங்கை இலைகள் – 4 கப்
தண்ணீர் – 6 கப்
உப்பு மிளகு சுவைக்கு
எப்படி செய்வது?
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து கிளறவும். சிறிது நேரத்திற்கு பின்னர் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் கிளறி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் கீரை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர் தண்ணீர் உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கினால் முருங்கை கீரை சூப் ரெடி.