30.2 C
Chennai
Saturday, Jun 29, 2024
drumstickmasala
ஆரோக்கிய உணவு

சுவையான முருங்கைக்காய் மசாலா

தற்போது மார்கெட்டில் முருங்கைக்காய் அதிகம் விற்கப்படுகிறதா? ஏனெனில் முருங்கைக்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. உங்களுக்கு முருங்கைக்காய் ரொம்ப பிடிக்குமெனில், அதனைக் கொண்டு சாம்பார் மட்டும் செய்து சாப்பிடாமல், மசாலா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த முருங்கைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Murungakkai/Drumstick Masala Recipe
தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் – 5
பூண்டு – 5 பற்கள்
பெரிய வெங்காயம் – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 1/4 கப்
சோம்பு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் முருங்கைக்காயை வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் முருங்கைக்காய், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கைகாயானது நன்கு வெந்த பின், அதில் தேங்காய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், முருங்கைக்காய் மசாலா ரெடி!!!

Related posts

எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெசிபி -ஹெல்த் ஸ்பெஷல்

nathan

நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இதயத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்

nathan

இதுவும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாம்.. வைட்டமின் F பற்றி கேள்விபட்டதுண்டா?

nathan

கீரையில் என்ன இருக்கு?

nathan

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!

nathan

இந்த பொருட்களில் பாலை விட கால்சியம் அதிகமாக உள்ளதாம்…

nathan

ஆரஞ்சு அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

nathan