27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
70a176f323
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களது பர்ஸில் மறந்தும் இந்த பொருளை வைக்காதீங்க!தெரிஞ்சிக்கங்க…

பணம் என்பது இன்று மனிதர்களின் அத்தியாவசிய தேவையாக இருந்து வருகின்றது. பணத்தினை சம்பாதிக்க பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றனர்.அவ்வாறு சம்பாதிக்கும் பணம் எப்போதும் நாம் பயன்படுத்தும் பர்ஸில் நிலைத்திருக்க வேண்டும் என்பது நம்மில் அனைவரது விருப்பம்.

ஆனால் சிலர் சம்பாதிக்கும் பணம் அவர்களின் பர்ஸில் தங்குவதில்லை. வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது.இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், என்ன செய்தாலும் பணம் நீடிக்காது. அதோடு எப்போதும் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். சிலரது பர்ஸில் பணத்தைத் தவிர வேறு சில பொருட்களும் இருக்கும்.

வாஸ்துப்படி பர்ஸில் தேவையற்ற பொருட்கள் இருந்தால், அது எப்போதும் பணப் பிரச்சனையை உண்டாக்கும். இப்போது வாஸ்து படி எந்தெந்த பொருட்களை பர்ஸில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பழைய பில்

பர்ஸில் பழைய பில்களை சேமித்து வைப்பது அசுபமாக கருதப்படுவதுடன், வாஸ்துப்படி பண இழப்பை உண்டாக்கும்.

கடவுளின் போட்டோ
பலர் கடவுளின் போட்டோவை தங்களுடன் வைத்திருப்பதை சுபமாக கருதலாம். ஆனால் கடவுளின் போட்டோவை பர்ஸில் வைத்திருக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்தால், கடன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

சாவி
பலர் தங்கள் வீட்டு அல்லது வண்டி சாவியை தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது மோசமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, பர்ஸில் எந்த வகையான உலோகப் பொருளையும் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து பண இழப்பிற்கு வழிவகுக்கும். எனவே இத்தவறை செய்யாதீர்கள்.

இறந்தவர்களின் போட்டோக்கள்
இறந்தவர்களின் போட்டோக்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கக்கூடாது. ஆனால் பலர் இறந்தவர்களுடனான ஆழமான தொடர்பின் காரணமாக தங்களுடன் அவர்கள் எப்போதும் இருக்க வேண்டுமென்று தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள்.

ஆனால் இப்படி வைத்திருப்பது நல்லதல்ல. வாஸ்துப்படி, பர்ஸ் லட்சுமி தேவி குடியிருக்கும் இடமாக கருதப்படுகிறது. எனவே அவ்விடத்தில் இறந்தவர்களின் போட்டோவை வைப்பது வாஸ்து குறைபாடாகி, பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

கிழிந்த நோட்டுகள்
பர்ஸில் எப்போதும் கிழிந்த நோட்டுகளையோ, அழுக்கான காகிதத்தையோ வைத்திருக்கக்கூடாது. பர்ஸை ஒருவர் எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது லட்சுமி தேவி குடியிருக்கும் இடம்.

உங்கள் பர்ஸில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், ஸ்ரீ யந்திரத்தை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். இது லட்சுமி தேவியின் வடிவமாகும். இது அதிக பணத்தை ஈர்க்கும் மற்றும் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு

Related posts

இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது!…

sangika

இடுப்பு கொழுப்பை மட்டும் மின்னல் வேகத்தில் கரைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா நாம கொடுக்கிற முத்தத்திற்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

nathan

இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலில் இருந்து வெளிவர ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவார்களாம்!

nathan

இடது கையை பயன்படுத்துவது அமங்கலமான ஒன்றா?தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்திற்கு டிஸ்யூ பயன்படுத்துகிறீர்களா?

nathan

தெரிஞ்சிக்கங்க…வாங்கும் தங்கத்தை உப்புக்குள் வைத்து எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்க ! புதைந்திருக்கும் குணங்களை தெரிஞ்சிக்கோங்க…

nathan

உங்க குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?அப்போ இதை செய்யுங்க!

nathan