22 6222649f0f3f9
ஆரோக்கிய உணவு

சுவையான பச்சை பட்டாணி தேங்காய் சாதம்

குழந்தைகள் விரும்பி உண்ண மதிய உணவாக இந்த பச்சை பட்டாணி தேங்காய் சாதம் செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1½ கப், தேங்காய்த்துருவல் – 1/2 கப், பச்சை பட்டாணி – 3 டேபிள் ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 6 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவைக்கு.

செய்முறை விளக்கம்

முதலில் பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும். அடுத்ததாக பச்சரிசியை உதிர் உதிராக வேக வைத்து கொள்ளவும்.

பின்னர் பச்சை பட்டாணியை அரைமணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக விடவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் தேங்காய்த்துருவல், உப்பு, வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

அடுத்து, அதில் வேக வைத்த சாதத்தைச் சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி உலர் திராட்சை, கொத்தமல்லித்தழை தூவி நன்றாகக் கலந்து பரிமாறவும். இப்போது, சூப்பரான பச்சை பட்டாணி தேங்காய் சாதம் ரெடி.

Related posts

அன்றாடம் பருப்பு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan

முட்டைகோஸ் ஜூஸினால் இவ்வளவு நன்மைகளா?

nathan

இறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

nathan

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்

nathan

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கொண்டைக்கடலை சாப்பிடலாமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பன்னீர் செட்டிநாடு

nathan

இடுப்பு எலும்பை வலுப்படுத்தும் வெந்தயக்களி

nathan

ஆரோக்கியம் – நம்பிக்கைகளும் நிஜங்களும்

nathan