கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம்
ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும்
என்னதான் காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட் அடிக்க சென்றுவிடுவார்கள் என ஆண்கள் மீது பெண்களுக்கு பொதுவான கருத்து ஒன்றிருக்கிறது. ஆனால் அந்த நேரங்களில் ஆண்களின் ஒரு அணைப்பு போது பெண்களை சமாதானம் செய்வதற்கு.
கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம். மிகவும் மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களின் போது யாராக இருப்பினும் கட்டியணைத்துக் கொள்வது மனிதர்கள் மத்தியில் இயல்பு தான்.
உறவு, காதல் என வரும் போது கட்டியணைப்பதில் பல விதம் உள்ளன. ஒவ்வொரு மாதிரி கட்டியனைப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. காதல் உணர்வு பெருக்கெடுக்கும் போது ஆண்கள் வித விதமாக கட்டிபிடிப்பது உண்டாம்.
ஒரு கையில் தோளில் சாய்த்துக் கொள்வது போல கட்டிப்பிடிப்பது, ஒருவர் சார்ந்து உணர்ச்சிபூர்வமாக இருக்கும் நிலை அல்லது வெறுமென கட்டிப்பிடிப்பது போன்றதாகும்.
மனதில் நிறைந்த மகிழ்ச்சியை உங்களிடம் தான் முழுமையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து அணைக்கும் போது ஆண்கள் இவ்வாறு வேகமாக கட்டியணைப்பதுண்டு.
உங்களை நீண்ட நாள் பிரிந்திருந்து அல்லது அதிகளவு மிஸ் செய்தது போன்ற உணர்ச்சி அதிகரித்திருந்தால் தூக்கிப்பிடித்து கட்டிப்பிடிப்பார்கள்.
காதல் சார்ந்து உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் இருக்கும் போது ஆண்கள், கண்களை பார்த்தவாறு கட்டிப்பிடிப்பது உண்டு.
வெட்கம் அல்லது நாணம் எட்டிப்பார்க்கும் போது ஆண்கள் தலைகள் ஒட்டியிருப்பது போன்று கட்டியணைப்பார்கள்.
ஆண்களுக்கு பிடித்த விஷயத்தை துணை செய்யும் போது, இறுக்கமாக கட்டித்தழுவி உடலோடு உடல் பிணைந்தது போல கட்டியணைப்பார்கள். இது மிகுதியான ரொமாண்டிக் சூழலிலும் ஏற்படலாம்.