30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்

தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.

தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

தக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் கூடும்.

உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு கருப்பா இருந்தாலும் இந்த காயை அரைத்து தேய்ச்சா ஒரே வாரத்துல கலராகிடலாம்…

nathan

உங்களுக்கு இப்படி இருக்கிற தேவையில்லாத மச்சத்தை நீக்கணுமா?அப்ப இத படிங்க!

nathan

பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா?

nathan

மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகளை விரட்டியடிக்கும் ஒரு ஒரு இயற்கை பொருள்!

nathan

மாசின்றி உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கும் க்ரீன் டீ ஸ்க்ரப் !!

nathan

கண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் !!

nathan

இரண்டே நாளில் அழகாகலாம்!

nathan

தயிரை கொண்டு இதெல்லாம் செய்து பார்த்திருக்கிறீர்களா !

nathan

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறை

nathan