29.8 C
Chennai
Monday, Jul 13, 2026
முகப் பராமரிப்பு

கண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் !!

ண்களைச் சுற்றிலும் மிக மென்மையான சருமம் காணப்படும்.

வயதாகாவிட்டாலும் சிலருக்கு எளிதில் சுருக்கம் உண்டாகும் அதற்கு மிக முக்கிய காரணம் கண்களில் உண்டாகும் வறட்சியே.

அதோடு சரியான அளவு நீர் குடிக்காத போதும் கண்களில் சுருக்கம் உண்டாகிவிடும்.

காபி டீ அதிகமாக குடிக்கும்போது நீர்சத்துக்கள் குறைந்து கண்களில் விரைவில் சுருக்கம் உண்டாகிவிடும். இந்த சுருக்கங்களை போக்க முக்கியமாக அதிக நீர் அருந்துங்கள்.

அதன்பின்னர் சரும வறட்சியையும் சுருக்கங்களையும் சரிப்படுத்தும் விதமாக இங்கே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தினால் சுருக்கங்கள் மறைந்து கண்கள் அழகாய் பளிச்சிடும்.

கோகோ பட்டர் :
கோகோ பட்டர் கோகோ கொட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. இது சுருக்களை மறையச் செய்யும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் இரவில் கோகோ பட்டரை சிறிது எடுத்து கண்களைச் சுற்றிலும் லேசாக பூசி மசாஜ் செய்துவிட்டு படுங்கள். சில நாட்களிலேயே சுருக்கங்கள் மறைந்துவிடும்.

ஷியா பட்டர் : இதுவும் வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தப்படுவது. ஷியா பட்டர் சருமத்தை மென்மைப்படுத்தி ஈரப்பதம் அளிக்கும். கண்களைச் சுற்றில் தினமும் இரு வேளை பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும்.

பெட்ரோலியம் ஜெல்லி : பெட்ரோலியம் ஜெல்லி வெடிப்புகளையும் சரும பாதிப்புகளையும் சரிப்படுத்தும். கண்களைச் சுற்றிலும் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சுருக்கங்களை எளிதில் மறையச் செய்யலாம்.

ஜுஜுபா எண்ணெய் :
இது பலவித அழகு சாதனக் க்டைகளிலும் ஆயுர்வேத கடைகளிலும் கிடைக்கும். இது மிகவும் சென்ஸிடிவான சருமத்திற்கும் ஏற்றது. சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் அளிக்கும்.

கற்றாழை : இது சருமத்தால் விரைவில் உறிஞ்சப்படும். துரிதமாய் அதன் பாதிப்புகளை சரி செய்து கண்களை இளமையாக்குகிறது. கற்றாழையின் சதைப் பகுதியை தினமும் தடவி வாருங்கள்.

வெள்ளரி சாறு : வெள்ளரி சுருக்கங்களை மறையச் செய்யும். கண்களில் காணப்படும் கருவளையத்தையும் காணாமல் போகச் செய்யும். வாரம் 3 நாட்கள் வெள்ளரிச் சாறை எடுத்து கண்களில் தடவி காய்ந்ததும் கழுவவும்

Related posts

உங்க முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா..? அப்ப இத படிங்க!

nathan

தூய்மையான முகம் எப்படி பெறலாம்? சில சிறந்த ஆயுர்வேத குறிப்புகள் !!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகான மென்மையான உதடுகளைப் பெற சில டிப்ஸ்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க தமிழர்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள்தான் காரணமாம்?

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

உடலில் ஏற்பட்ட தழும்பை மறைய வைக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அடேங்கப்பா! செ க்ஸி யான உடலைப் பெற பிபாசா பாசு என்னலாம் செய்றாங்க தெரியுமா?

nathan

சரும சுருக்கங்கள் நீங்க சில டிப்ஸ்

nathan