28.9 C
Chennai
Monday, May 20, 2024
Immunity 656x410 1
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…வைரஸை எதிர்க்கும் அன்றாட உணவுப் பொருட்கள்

மழையும், பனியும் மாறி மாறி வரும் இந்தக் காலநிலையில், நோய்கிருமிகளின் தொற்றும் அதிகரித்து வருகிறது. கொரோனா, டெங்கு என ‘வைரஸ்’ கிருமிகளின் மூலம் பரவும் நோய்கள் தீவிரம் அடையும்போது, அதில் இருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமானது.

நாம் பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தும் இஞ்சி, மிளகு, பூண்டு, மஞ்சள், வெங்காயம் போன்ற பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை என்பது அனைவரும் அறிந்தது. இவற்றைத்தவிர அவ்வப்போது உணவில் சேர்க்கும் சில பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. அவற்றை பற்றிய தொகுப்பு இதோ…

வைட்டமின் ‘சி’ – சிட்ரஸ் பழங்கள் மற்றும் கீரை வகைகள்

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, கீரை வகைகள் போன்றவற்றில் ‘வைட்டமின் சி’ அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி கூடும்.

பீட்டா கரோட்டின் – கீரைகள் மற்றும் கிழங்கு வகைகள்

பசலைக்கீரை, கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகளில் இருக்கும் பீட்டா கரோட்டின் ‘வைட்டமின் ஏ’யாக மாற்றம் அடையும். இது வைரஸ் போன்ற நச்சுக்கிருமிகளை எதிர்க்கும் ‘ஆன்டிபாடிகள்’ எனும் ‘நோய் எதிர்ப்பு புரதங்களை’ உற்பத்தி செய்யும்.

வைட்டமின் ‘ஈ’ – விதைகள் மற்றும் கொட்டைகள்

கொழுப்பில் கரையும் சத்துக்களின் வகையைச் சேர்ந்த ‘வைட்டமின் ஈ’ பசலைக்கீரை, பாதாம், சூரிய காந்தி விதை போன்றவற்றில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்கச் செய்யும்.

ஆன்டி ஆக்சிடென்டுகள் – கிரீன் டீ

கிரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், கிருமித்தொற்றை தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்யும்.

வைட்டமின் ‘டி’ – சூரிய ஒளி, மீன் மற்றும் முட்டைகள்

நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு வைட்டமின் டி அவசியமானது. இது முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள், மீன்கள் போன்ற உணவுகள் மூலமும், சூரிய ஒளி மூலமும் கிடைக்கும்.

புரோபையாட்டிக்ஸ் நொதிக்கவைக்கப்பட்ட உணவுப்பொருட்கள்

தயிர், யோகர்ட், ஊறுகாய் மற்றும் நொதிக்கவைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் இருக்கும் ‘புரோபையாட்டிக்’ நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் தன்மை கொண்டது. மேலும் வயிற்றின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் இது உதவும்.

ஜிங்க் (துத்தநாகம்) – கடல் உணவுகள்

நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு முக்கியமான தாது ‘ஜிங்க்’. இது நண்டு, இறால், லாப்ஸ்டர் போன்ற ஓடு இருக்கும் கடல் உணவுகள், விலங்குகளின் இறைச்சி போன்றவற்றில் உள்ளது.

Related posts

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

nathan

காலையில் தினமும் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

மாம்பழத் தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

skin benefits of watermelon – சருமம் பொலிவாக தர்பூசணி

nathan

சூப்பர் டிப்ஸ்.. மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யும் எள் தாவரம்

nathan

வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்கும் சோம்பு !!

nathan

உங்களுக்கு தெரியுமா முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

nathan

தெரிந்துகொள்வோமா? ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan