29.3 C
Chennai
Wednesday, Jul 23, 2025
22 61fd0513486
ஆரோக்கியம் குறிப்புகள்

வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம் -70,000 பவுண்டுகள் மதிப்பிலான கிரிப்டோகரன்சியுடன் ஓய்வு பெற திட்டமிட்ட தம்பதி

அவுஸ்திரேலியாவில் தம்பதி ஒன்று 70,000 மதிப்பிலான கிரிப்டோகரன்சியுடன் 58 வயதில் ஓய்வு பெற திட்டமிட்டிருந்த நிலையில், ஒரே நாளில் அவர்களின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது அந்த சம்பவம்.

சிட்னியில் குடியிருந்து வரும் இந்திய தம்பதியரான 49 வயது மனு குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷல்லு ஆகியோரே கண்முன்னே மொத்த சேமிப்பையும் இழந்து அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்துப்போயுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான மனு குந்த்ரா கடந்த 2017ல் அவுஸ்திரேலியாவில் செயல்பட்டுவரும் தனியார் கிரிப்டோகரன்சி நிறுவனமான Independent Reserve-ல் கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார். தமது சேமிப்பில் இருந்து 23,000 பவுண்டுகளுக்கு 0.25 பிட்காயின், 35 Ethereum டோக்கன்கள் மற்றும் 40 Litecoins ஆகியவைகளை பிப்ரவரி முதல் ஏப்ரல் 2018 வரையான காலகட்டத்தில் வாங்கியுள்ளார்.

ஆனால் திடீரென்று கிரிப்டோகரன்சி சந்தை கடும் சரிவை சந்திக்க, இவர் சில மாதங்கள் வர்த்தகம் செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில், 2020ல் கிரிப்டோகரன்சி சந்தை மீண்டும் எழுச்சி காண இவரது கிரிப்டோகரன்சி மதிப்பும் பலமடங்கு எகிறியது.

 

23,000 பவுண்டுகளுக்கு வாங்கிய கிரிப்டோகரன்சி மதிப்பு 2021 மே மாதத்தில் 50,000 பவுண்டுகளை எட்டியது. இதனையடுத்து தங்களின் 58வது வயதில் 70,000 மதிப்பிலான கிரிப்டோகரன்சி சேமிப்புடன் ஓய்வு பெறலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் குந்த்ரா தம்பதி.

அப்போது தான் பேரிடியான அந்த சம்பவம் நடந்துள்ளது. தங்களது கணக்கில் 50,000 பவுண்டுகளுக்கான கிரிப்டோகரன்சியை எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் 8.86 பவுண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இவர்களின் கணக்கின் பரிவர்த்தனைகளை பரிசோதிக்கையில், இவர்களுக்கு தெரியாமல் மர்ம நபர்கள் 50 முறை பரிவர்த்தனை செய்துள்ளது கண்டுபிடித்தனர். இவர்களின் புகாரின் பேரில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் துருக்கியில் இருந்து ஒரு கும்பல் செயல்பட்டுள்ளதும், அங்கிருந்து நைஜீரியாவுக்கு மாற்றப்பட்டதும் விசாரணையில் அம்பலமானது.

ஆனால் இந்த வழக்கில் தங்களால் எந்த நடவடிக்கையும் சட்டப்பூர்வமாக முன்னெடுக்க முடியாது என சிட்னி பொலிசார் கைவிரித்துள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் ஓய்வு பெறலாம் என திட்டமிட்டிருந்த குந்த்ரா தம்பதி, இன்னொரு 7 ஆண்டுகள் அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி, மேலதிகமாக கிரிப்டோகரன்சி வாங்கும் வாய்ப்பையும் குந்த்ரா தவறவிட்டுள்ளார். அந்த பேரிழப்பில் இருந்து மீள தமக்கு 4 மாதங்கள் தேவைப்பட்டது என்கிறார் மனு குந்த்ரா. மட்டுமின்றி Independent Reserve நிறுவனமும் இந்த விவகாரத்தில் தங்களால் உதவ முடியாது என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

உங்களுக்கு தெரியுமா பூமிக்கு மேல் விளையும் தொன்மையான காவளிக்கிழங்கு!

nathan

நோயெதிர்ப்பு சக்தியைப் பற்றி கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலைகளை செய்தால் பெண்கள் உடல் எடையை குறைக்கலாம்.!

nathan

தினமும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இதயநோய் வருமாம்..!!

nathan

கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

nathan

தொடையில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்!

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் நினைச்ச விஷயத்துல வெற்றி அடையாம விட மாட்டாங்களாம் தெரியுமா?

nathan

எப்போதும் குளிக்கும் போது நல்ல ஐடியாக்கள் தோன்றுவது ஏன்? தெரிஞ்சிக்கங்க…

nathan