24 1422102235 masala more
ஆரோக்கிய உணவு

சூப்பரான மசாலா மோர்

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், அப்போது இளநீர், மோர் போன்ற பானங்களை குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக மோரை கோடைக்காலங்களில் தான் மோரை அதிகம் பருகுவோம். ஆனால் தற்போது மற்ற காலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இங்கு அத்தகைய மோரை எப்படி சுவையாக செய்து குடிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மசாலா மோரை தவறாமல் செய்து ருசித்துப் பாருங்கள்.

Masala Buttermilk Recipe
தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் – 1 கப்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

பச்சை மிளகாய் – 1/2
கறிவேப்பிலை – 3 இலை
இஞ்சி – 1/4 இன்ச்

செய்முறை:

முதலில் தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

Related posts

ருசியான தேன் மிட்டாய்!! வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா!!

nathan

கண்ணின் ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி…!அப்ப இத படிங்க!

nathan

இதை படியுங்கள்.. எது நல்லது, எப்போது சாப்பிடலாம்? பசு நெய், எருமை நெய்…

nathan

சூப்பரான கேரட் கீர்

nathan

சூப்பர் டிப்ஸ்! “வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்”.இனி மாத்திரைகள் வேண்டாம்.. பப்பாளி மட்டும் போதும்..!!

nathan

பாகற்காய் சாப்பிட கசக்கிறதா ?… இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது

nathan

முடவாட்டுக்கால் கிழங்கு தீமைகள்

nathan

skin benefits of watermelon – சருமம் பொலிவாக தர்பூசணி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நூறு மருத்துவர்களுக்கு சமமான இஞ்சி… எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம்?

nathan