இன்றைய வர்த்தக உலகில், உலகம் முழுவதும் ஒரே சட்டம், ஒரே செயற் கூற்று என்று இல்லாமல். அந்தந்த நாடுகள் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்தி, தளர்த்தி கொள்கிறார்கள். புதியதாக ஓர் நோய் தாக்கம் ஏற்படுகிறது எனில், உலகம் முழுவதும் அனைத்து ஆய்வகங்களும் அதற்கான மருந்துகளை தயாரித்து விற்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
நோய் தாக்கம், ஒன்று தான் ஆனால், அதற்கான மருந்துகள் என்ற பெயரில் பலவன உலக சந்தையில் விற்கப்படுகிறது. இதில் ஒருவர் விலை உயர்வாகவும், குறைவாகவும் உலக சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இந்த தருணத்தில் தான் சில மருந்துகள் தரக்குறைவாக, சரியான ஆய்வுகள் செய்யப்படாமல் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இது போன்ற சில மருந்துகளால் மக்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதுப் போன்ற மருந்துகளை சில நாடுகள் தடை செய்த போதிலும் கூட பல உலக நாடுகளில் இன்றலும் விற்பனை செய்யப்பட்டு தான் வருகிறது….
Phenylpropanolamine
பொதுவாக சளி, இருமலுக்கு இந்த மாத்திரை இந்தியாவில் விற்கப்படுகிறது. ஆனால், இந்த மாத்திரை மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட காரணமாக இருப்பதாக அமெரிக்கா இதை தடை செய்தது. சந்தேகத்தின் பேரில் பிடிப்பட்டுள்ள இந்த மருந்து கூடிய விரைவில் இந்த மருந்து இந்தியாவில் தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Metamizole (Analgin)
இது ஒரு வலிநிவாரணி ஆகும். இது எலும்பு மஜ்ஜை பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இது சில வகை வெள்ளை இரத்த அணுக்களை உருவாகமல் தடுக்கிறது. Analgin தடைசெய்யப்படவில்லை எனிலும், இதன் கலப்பு மருந்துகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Oxyphenbutazone
Analgin-னை போலவே Oxyphenbutazone-லும் வலி நிவாரணி மருந்து தான். இதுவும் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் உண்டாக்குகிறது என பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
Nimesulide
அமெரிக்கா, யூ.கே., ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகம் கூட செய்யப்படாத இந்த Nimesulide எனும் மருந்து இந்தியாவில் பெருமளவில் விற்கப்படுகிறது. இது கல்லீரல் செயலிழப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மற்றும் குழந்தைகளின் நலனையும் வெகுவாக பாதிக்கும் தன்மைக் கொண்டது இந்த Nimesulide.
Furazolidone and Nitrofurazone
இந்த மருந்து பாக்டீரியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு உட்கொள்ளும் மருந்தாக இருக்கிறது. இந்த மருந்து புற்றுநோய் கட்டி உருவாக காரணியாக இருக்கிறது என்று பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. Nitrofurazone ஆன்டி-பாக்டீரியா கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் புற்றுநோய் உருவாக காரணியாக இருக்கிறது என்பதால் உலக நாடுகள் தடை செய்துள்ளது.
Cerivastatin
இந்த மருந்தை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. ஆனால், இந்த மருந்து இந்திய சந்தையில் இன்னமும் விற்பனையில் இருந்து வருகிறது.
Phenolphthalein
இந்த மருந்து பேதியை தூண்டும் மருந்தாகும். ஆய்வகத்தில் எலிகளின் மீது பரிசோதித்த போது, இந்த மருந்து மரபணுக்களில் தாக்கம் ஏற்படுத்தி புற்றுநோய் உண்டாக காரணியாக இருக்கிறது என தடை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
Tegaserod
மலச்சிக்கல் மற்றும் குடல் அழற்சி நோய்க்கு மருந்தாக Tegaserod எனும் மருந்து உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், இந்த மருந்து ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு ஏற்பட காரணியாக இருக்கிறது என்பதால் சந்தையில் இருந்து உடனே பின்வாங்கப்பட்டது.
Pergolide
பார்கின்சன் நோய் சிகிச்சைக்கான மருந்தாக பயன்படுத்தப்படும் இந்த Pergolide எனும் மருந்து. இது இதய வால்வுகளில் சேதம் ஏற்படுத்துவதால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது.