29.3 C
Chennai
Tuesday, Nov 19, 2024
Neththili
ஆரோக்கிய உணவு

கருவாடு சாப்பிட்ட பின்னர் இதை மட்டும் செய்யாதீங்க!தெரிஞ்சிக்கங்க…

கருவாடு பலருக்கும் பிடித்த உணவாக உள்ளது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள்.

எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்ல தான். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான்.

ஆனால், கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?

 

கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம். மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.

மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஆகாமல் தடுக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.

 

சைனஸ், மூக்கடைப்பு, சளி, இருமல், தும்மை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற கோளாறு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது.

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது, ஆகையால் அவர்க கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.

 

கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாயும் கூட இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவுகள் தான்.

மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு ஒரு விடயத்தை செய்ய கூடாது.

 

அதாவது பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வரலாம்.

Related posts

வல்லாரை ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மூளையையும் சுறுசுறுப்படையச் செய்யும்.

nathan

கசப்பான சுண்டைக்காயை தினமும் சாப்பிட்டலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சுகருக்கு செலவே இல்லாத சூப்பர் தீர்வு…

nathan

சுவையான தயிர் சேப்பக்கிழங்கு ரெசிபி

nathan

வயது வந்த பெண்களுக்கு ஊட்டம் தரும் உளுந்து -தெரிஞ்சிக்கங்க…

nathan

உடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்

nathan

உங்களுக்கு தெரியுமா மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

nathan

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிட வேண்டியவைகள் மற்றும் சாப்பிடக்கூடாதவைகள்!

nathan