உடற்பயிற்சி என்பது ஒரு தவம் போல, கட்டுக்கோப்பான உடல் வேண்டுமானால் நீங்கள் பல விஷயங்களை விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும். சரியான டயட் முறைகளை பின்பற்ற வேண்டும். முன் அனுபவம் உள்ள பயிற்சியாளர்களின் ஆலோசனைப் படி உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தசைகள் நன்கு பெரிதாகவும், வலுவாகவும் வேண்டுமானால் 100% அவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். உணவு உட்கொள்வதில் கவனமாக இருப்பது அவசியம். பயிற்சி செய்வதற்கு இணையாக ஓய்வும் தேவை.
‘தி ராக்’ போல உடற்கட்டு வேண்டுமா? அப்போ அவரோட ஃபிட்னஸ் ரகசியத்த தெரிஞ்சுக்குங்க!!!
இனி, தசைகளை நன்கு பெரிதாக, வலுவாக வைத்துக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய ரூல்ஸ் பற்றி பார்க்கலாம்…
அதிக எடை
சீரான முறையில் பளுவை அதிகரித்து பயிற்சி செய்தல் வேண்டும். அதுவும் உங்கள் தசை வளர்ச்சி, உடல் நிலைக்கு ஏற்ப செய்தல் முக்கியமானது ஆகும்.
வேகமான பயிற்சி
தசை வளர்ச்சி அதிகரிக்க பயிற்சிகளை வேகமாக செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் உங்களது பயிற்சியாளரின் ஆலோசனையின் படி செய்வது நல்லது. ஏனெனில், ஒவ்வொருவரின் உடல் வாகு பொறுத்து, அதற்கேற்ப பயிற்சிகள் செய்ய வேண்டும்.
சோர்வடையும் வரை…
உங்கள் உடல் சோர்வடையும் வரை பயிற்சி செய்யிங்கள். அதன், பின் தேவையான ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு உடற்பயிற்சி செய்யும் போது, நல்ல உறக்கும் தேவைப்படும்.
முறை
ஒவ்வொரு பயிற்சியை முடித்த பிறகும் சிறிது இடைவேளையும், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்வதும் அவசியம், இது உங்கள் தசைகள் இலகுவாக உணர பயனளிக்கும்.
அட்டவணை
ஒருநாள் நன்கு பயிற்சி செய்த பிறகு, மறுநாள் நல்ல ஓய்வு எடுங்கள். திங்கள் கிழமை பயிற்சி செய்தால் கட்டாயம் செவ்வாய்க்கிழமை ஓய்வெடுக்க வேண்டும். பெரும்பாலும் பயிற்சியாளரே , இவ்வாறான அட்டவணை முறைகளைக் கூறுவார்.
ஜிம்
முதலில் நல்ல ஜிம்மை தேர்ந்தெடுத்து பயிற்சிகளை துவங்குங்கள், நீங்களாக பயிற்சிகள் மேற்கொள்வது எதிர்வினை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.