30.5 C
Chennai
Friday, May 17, 2024
darkunderarm 16
சரும பராமரிப்பு

பெண்களே உங்க அக்குள் கருப்பா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

தற்போது ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அனைவராலுமே ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடிவதில்லை. இதற்கு தடையாக இருப்பது அக்குள் கருமை. கருப்பான அக்குளுடன் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிந்தால், அது ஸ்லீவ்லெஸ் தோற்றத்தையே பாழாக்கிவிடும். ஆனால் அக்குள் கருமையைப் போக்க பல பொருட்களை கடைகளில் விற்கப்படுகின்றன. அவை அனைத்தும் நல்ல பலனைத் தருமா என்றால் அது சந்தேகத்திற்குரியது தான்.

DIY Masks To Lighten Your Underarms In Tamil
இருப்பினும் அக்குளில் உள்ள கருமையை எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் நீக்க நீங்கள் விரும்பினால், அதற்கு ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், அக்குளில் உள்ள கருமையைப் போக்கலாம். அதன் பின் ஸ்லீவ்லெஸ் அணிய நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியம் இருக்காது. சரி, இப்போது அக்குள் கருமையைப் போக்க உதவும் வழிகளைக் காண்போம்.

ஸ்க்ரப் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்

* டூத் பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் 3-4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து, அத்துடன் டூத் பேஸ்ட் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அக்குளை நீரால் கழுவலாம் அல்லது சுத்தமான ஈரத் துணியால் துடைத்து எடுக்கலாம்.

டோனிங் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1/4 கப்

* அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – 1 டேபிள் ஸ்பூன்

* பால் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன் மற்றும் பாலை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் அதை அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.

லைட்னிங் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* மைசூர் பருப்பு பேஸ்ட்- சிறிது

* எலுமிச்சை – பாதி

* பால் – 1/2 கப்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் மைசூர் பருப்பு பேஸ்ட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பாதி எலுமிச்சையைப் பிழிய வேண்டும்.

* அதன் பின் பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதை அக்குள் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

ஸ்மூத்னிங் மாஸ்க்
ஸ்மூத்னிங் மாஸ்க்
தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜெல் அல்லது மாய்ஸ்சுரைசர்

பயன்படுத்தும் முறை:

* கற்றாழை ஜெல் அல்லது மாய்ஸ்சுரைசரை அக்குள் பகுதியில் தடவ வேண்டும்.

* 5-10 நிமிடம் உலர்த்த வேண்டும்.

தினமும் கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி வந்தால், அக்குள் பகுதி மென்மையாக இருக்கும்.

Related posts

முக அழகை‌ப் பேணுவது அவ‌சிய‌ம் !

nathan

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் அழகாக காட்சியளிக்க அருமையான டிப்ஸ்!…

sangika

இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்!

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….

sangika

பத்தே நிமிடங்களில் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்பட சில அட்டகாசமான டிப்

nathan

பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

nathan

முகம் மற்றும் கழுத்து கருமையை போக்கும் வழிமுறைகள்

nathan

இயற்கை தரும் பேரழகு !

nathan

உங்களுக்கு தெரியுமா உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான நன்மைகள்!!

nathan