27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
plantain stem juice
ஆரோக்கிய உணவு

வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

முக்கனிகளுள் ஒன்றான வாழையின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் வாழைப்பழத்தின் நன்மைகளைப் பற்றி தெரியும். அதே சமயம் வாழைத்தண்டின் நன்மைகளைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

குறிப்பாக இக்கால தலைமுறையினருக்கு வாழைத்தண்டின் நன்மைகள் பற்றி தெரியாது. அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம் என்ற ஒன்றே தெரிந்திருக்காது.

 

ஆனால் மற்ற பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பது போல, வாழைத்தண்டையும் ஜூஸ் போட்டு குடிக்கலாம். அதிலும் இதனை வீட்டில் மிகவும் சிம்பிளாக செய்து குடிக்கலாம். இங்கு வாழைத்தண்டு கொண்டு எப்படி ஜூஸ் செய்வதென்றும், அதனைக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சிறுநீரக கற்கள்

தற்போது சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுவோர் அதிகம். இதற்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது எனலாம். சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

எடை குறைவு

வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.

அமில மிகைப்பு

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இப்படி தினமும் குடித்தால், நீரிழிவிற்கான மருந்துகளை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.

சிறுநீரக பாதைத் தொற்று

வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்தவும் பெரியும் உதவியாக இருக்கும்.

வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை

மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில் உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் ரெடி!

குறிப்பு:

பலரும் வாழைத்தண்டு சுத்தம் செய்ய கஷ்டமாக உள்ளது என்று, இதனை அடிக்கடி டயட்டில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இதனை ஒருமுறை சுத்தம் செய்து, புளிக்காத மோரில் ஊற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்தால், நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும். மேலும் இப்படி வாரம் ஒருமுறை சுத்தம் செய்து கொண்டு, வேண்டிய போது தேவையான அளவு எடுத்து அரைத்து ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

Related posts

kudampuli benefits in tamil – குடம்புளி (Garcinia Cambogia

nathan

வெற்றிலை உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள்

nathan

வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா..?

nathan

நீர்மோர் (Buttermilk)

nathan

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

nathan

இந்த கீரையின் தொக்கை சாப்பிட்டால் போதும்… நோய்கள் பறந்துபோகுமாம்…!

nathan

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

இதோ அற்புத மாற்றம்தரும் தர்பூசணி விதையை கொதிக்க வைத்து 3 நாட்கள் குடியுங்கள்

nathan

அதிமதுரம் சாப்பிடும் முறை

nathan