உங்களால் முடிந்தால், தேநீர் மற்றும் குழம்பு போன்றவற்றில் இஞ்சி தோல் உரிக்காமல் அப்படியே சேர்த்து சமைக்கவும். அதில் நன்மைகள் ஏராளம்.
பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக அறியப்படும் இஞ்சியை எண்ணற்ற வழிகளில் உட்கொள்ளலாம். பலர் அதனை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுகின்றனர். மேலும் சிலர் இஞ்சி தோலை நீக்கியோ அல்லது தோலை நீக்காமலோ உணவில் சேர்த்துக்கொள்வர். இருப்பினும் இந்திய சமயலறைகளில் இஞ்சித் தோலை நீக்கிவிட்டு அதை பயன்படுத்தவே பல தாய்மார்கள் விரும்புகின்றனர்.
அப்படியானால் இஞ்சியில் உள்ள அனைத்து சத்துக்களும் அப்படியே இருக்க, அதன் தோலை சரியான வழியில் உரிக்க வேண்டும். இஞ்சி தோலை நீக்குவது குறித்து முன்னாள் சமையல் நிபுணர் கேத்தரின் மெக்பிரைட் என்பவர் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இஞ்சித் தோலை நீக்குவது குறித்து விளக்கினார். அதில், ஒரு பீலர் அல்லது கத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஸ்பூனின் பின்புறத்தைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார்.
“நான் இஞ்சியை உரிக்க ஒரு ஸ்பூன் பயன்படுத்துகிறேன்! நீங்கள் என்ன கருவியைப் பயன்படுத்துகிறீர்கள்?” என அந்த வீடியோவில் கேப்ஷன் செய்துள்ளார்.
View this post on Instagram