இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
அதேப் போல் இளநீரை தவறான நேரத்தில் மற்றும் அளவுக்கு அதிகமாக குடித்தாலும் ஆபத்துதான்.
இன்று நாம் அதிகமாக இளநீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து பார்க்கலாம்.
ஒருவர் இளநீரை அதிகமாக குடிப்பதால் வயிற்று பிரச்சனைகளை சந்திக்கலாம். சில சமயம் வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை அதிகம் குடிக்கக்கூடாது. இளநீரில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன.
அறுவை சிகிச்சை செய்தவர்கள் இளநீர் குடித்தால் கூடித்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகி உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடித்தால் சிறுநீரக பிரச்சனை தீவிரமாகிவிடும்.
வயிற்று உப்புசம் உள்ளவர்கள் இளநீரைக் குடிக்கக்கூடாது.
ஒரு நாளைக்கு எவ்வளவு இளநீர் குடிக்கலாம்?
உடலின் தினசரி பொட்டாசிய தேவையின் அளவு 2,600 மிகி முதல் 3,400 மிகி வரை ஆகும்.
ஒரு இளநீரில் சுமார் 600 மிகி பொட்டாசியம் உள்ளது.
ஆகவே இளநீரை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது ஹைபர்கேமியாவை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒரு 2-3 இளநீர் மட்டுமே குடிக்கலாம். அதிகம் குடித்தால் ஆபத்து.