21 61ae8eaf79b
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகள் எள்ளை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

எள் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த உணவு பொருளாகும்.

எள்ளில் வெள்ளை, கருப்பு, சிவப்பு, பழுப்பு அல்லது மஞ்சள் நிற எள் என நான்கு வகைகள் உள்ளன.

வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம் எடுக்கப்படுகிறது.

கறுப்பு எள், உணவுப் பொருளாகவும், மருந்து பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. இனி தினமும் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

 

  1. எள்ளை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீர் வெளியேறுவது அதிகமாகும்.
  2. நீரிழிவு நோய் உள்ளவர்கள் எள் கலந்த உணவைச் சாப்பிட்டால் உடலின் சர்க்கரை அளவு குறையும்.
  3. உடலின் உள் உறுப்புகளுக்கு சுறுசுறுப்பை உண்டாகும்.
  4. மூளைக்குத் தெளிவைத் தரும். வாயு பிரச்சனையால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் குறைக்கும்.
  5. எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, வயிற்றில் உள்ள வலி இவற்றைப் போக்கும்.
  6. எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு துப்பினால் வாய்ப்புண் ஆறும்.
  7. எள்ளை வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட, ரத்த மூலத்திலிருந்து ரத்தம் வருவது நிற்கும்.
  8. பற்கள் ஈறுகள் தாடை இவற்றில் பலக் குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும், நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பிக் கொண்டிருப்பதாலும் நன்மை பெருகும்.
  9. எள் உணவு உடலுக்கு பலத்தைத் தருகிறது.
  10. பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்பால் உருவாகுவது குறைவாக உள்ளது போல தோன்றினால் எள் கலந்த உணவை சாப்பிட்டால் தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  11. எள்ளை ஊற வைத்த தண்ணீரை அருந்தி வந்தால் உதிர போக்கு பிரச்சனை விரைவில் குணமாகும்.
  12. எள்ளையும், கருஞ்சீரகத்தையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும்.

Related posts

காபி ஆரோக்கியமானதா?

nathan

இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள்

nathan

கறிகாய்களினுடைய சத்தோ உடலில் சிறிதும் சேரவில்லை. இது ஏன்?????? எப்படிச் சமைத்தால் உடலுக்கு நல்லது?

nathan

நீங்கள் வாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் 10 அற்புத நன்மைகள் தெரியுமா!!

nathan

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

nathan

மருத்துவ குணங்கள் நிறைந்த அவரைக்காயின் பயன்கள்….! இத படிங்க!

nathan

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

nathan

ஏன் தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் உங்கள குடிக்க சொல்லுறாங்க தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்…!!

nathan