27.1 C
Chennai
Saturday, May 24, 2025
brinjal masala
ஆரோக்கிய உணவு

சுவையான கத்திரிக்காய் மசாலா

கத்திரிக்காய் சிலருக்கு ரொம்ப பிடிக்கும். அத்தகையவர்கள் கத்திரிக்காயை சாம்பார், வறுவல் என்று தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் இங்கு கத்திரிக்காய் மசாலா எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதனை செய்து மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

சரி, இப்போது கத்திரிக்காய் மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Brinjal Masala Recipe
தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
பட்டை – 1 இன்ச்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு பிரட்டி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் கத்திரிக்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.

கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கத்திரிக்காய் மசாலா ரெடி!!!

Related posts

வயது வந்த பெண்களுக்கு ஊட்டம் தரும் உளுந்து

nathan

நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்து tamil healthy food

nathan

பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்த இதை செய்யங்கள்!…

sangika

இதை சாப்பிடுவதல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதாம்…..

sangika

காலை எழுந்த பின் ஒரு டம்ளர் வேப்பில்லை சாறு குடித்தால் போதும்! தெரிஞ்சிக்கங்க…

nathan

ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சை

nathan

உங்களுக்கு தெரியுமா அளவுக்கு மீறி சாப்பிட்டால் பாதாமும் நஞ்சு தான்! இத முதல்ல படிங்க..!

nathan

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பாதாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா பதப்படுத்தப்பட்ட மாமிசம் புற்றுநோயை உருவாக்கும்

nathan