39500 annasi pazham saappiduvathan avasiyangal
ஆரோக்கிய உணவு

அன்னாசி பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா?அப்படி என்ன ஸ்பெஷல்?

`அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட அன்னாசி பழம் செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல் தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்டது.

100 கிராம் அன்னாசிப்பழத்தில் 88 சதவிகிதம் ஈரப்பதமும், 0.5 சதவிகிதம் புரதமும், 10.8 சதவிகிதம் மாவுச்சத்தும் 17 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 63 மில்லி கிராம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் நிறைந்துள்ளன.

 

`அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னசிபழத்தின் சாறு ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது. அன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

 

அன்னாசிபழத்தில் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் அதிக அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.

 

மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.

ஒற்றை தலைவலி சரியாகும்

ஒற்றைத் தலைவலி என்று சொல்லக்கூடிய ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

மூட்டு தேய்மானத்தை தடுக்கும்

அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது மூட்டு பகுதியில் உண்டாகும் தேய்மானத்தை கட்டுபடுத்தி வலியினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்

அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.

அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும் உங்களின் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்கும்

அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. மேலும் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

உயர் இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கு அன்னாசிபழம் பெரிதும் பயன்படுகிறது. அன்னாசிபழதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது.

பார்வை பிரகாசமடையும்

அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க அன்னாசிபழம் பயன்படுகிறது.

Related posts

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்

nathan

கொண்டைக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சுவையான பச்சை பட்டாணி தேங்காய் சாதம்

nathan

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

nathan

ஆரோக்கியம் தரும் உணவு வகைகள்

nathan

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கொய்யாப்பழம்!

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் பி 3 சத்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள்!!!

nathan