36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

தினமும் காலையில் ஒரே ஒரு அத்திப்பழம்-அதிக சத்துகள் நிறைந்துள்ளது

பலருக்கும் அத்திப்பழம் பற்றி பெரிதாக தெரியாது. அப்படியே தெரிந்தாலும் இதை எப்படி சாப்பிடுவது என்று பலருக்கும் குழப்பம் வரும். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும்.

மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கடைகளில் கிடைக்கும்.

இந்த உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக சத்துகள் நிறைந்துள்ளது. சரி வாங்க தினமும் உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.

Related posts

சீத்தாப் பழத்தில் இல்லாத சத்தா?

nathan

ஐஸ்க்ரீம் சாப்பிட்டா பெண்களின் கருவளம் அதிகரிக்குமா? ஐஸ்க்ரீமின் நன்மைகள்!!

nathan

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரியாணி சாப்பிடுவதில் உள்ள சாதக, பாதகங்கள்

nathan

சுவர் டிப்ஸ் !மூட்டு வலியை போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்!

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! தினமும் ஒரு பச்சை வெங்காயம்… உடலில் ஏற்படும் அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்

nathan

சுவையான காராமணி சாண்ட்விச்

nathan

முருங்கைக்காய் சாறை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்துக்கு மினுமினுப்பு அதிகரிக்கும்.

nathan

vitamin b foods in tamil – வைட்டமின் B-வகைகள்

nathan