அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் சாப்பிடும் சிக்கனுக்கும் பொருந்தும். உணவுப்பழக்கம் பல இடங்களுக்கு ஏற்ப மாறுபட்டிருந்தாலும், சிக்கன் என்பது உலகம் முழுவதும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுகினறனர்.
சிக்கன் சுவையானதாக இருப்பதோடு, சமைப்பதற்கு எளிதாகவும் இருக்கிறது. கொழுப்பு குறைவான சிக்கனில் புரதச்சத்து அபரிதமாக நிறைந்துள்ளது. ஆனாலும் நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
சிக்கனை தினமும் சாப்பிட்டால், உடலில் பல பாதிப்புகள் உண்டாகும். அதிக அளவில் சிக்கன் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும், இதய பாதிப்பை ஏற்படுத்தும்.
மனிதர்களுக்கு தேவையான தினசரி கலோரியில் 10 முதல் 35 சதவீதம் வரை புரதச்சத்து இருக்க வேண்டும். அதிகளவில் புரதச்சத்து உடலுக்குச் சென்றால் அது கொழுப்புக்களாக தேங்க ஆரம்பித்து, உடல் எடை அதிகரிக்கிறது.
இதைப் போன்றே சிக்கனும். அளவிற்கதிகமாக சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புகளின் அளவு அதிகரித்துவிடுவதோடு, இதய நோய் அபயத்தினை அதிகரிக்கும்.
தினமும் இறைச்சி சாப்பிடுபவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் குறைந்த உடல் எடையினைக் கொண்டுள்ளனர்.