15983631
ஆரோக்கிய உணவு

கவுனி அரிசி உருண்டை

தேவையான பொருட்கள்:

கவுனி அரிசி மாவு – 250 கிராம்,

தேங்காய்த்துருவல் – 100 கிராம்,
நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி – தேவையான அளவு.

செய்முறை:

கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும்.

ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.

சத்தான கவுனி அரிசி உருண்டை ரெடி.

Related posts

செரிமாணத்தை ஏற்படுத்தும் இஞ்சி சாதம்

nathan

கேரட் துவையல்

nathan

இந்த உணவுகள் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை எளிதில் குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! இரும்புச்சத்தை அதிகரிக்கும் அப்பத்தாக்களின் பலகாரம் கேழ்வரகு குலுக்கல்ரொட்டி..

nathan

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

nathan

மாதுளையின் நன்மைகள்

nathan

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

nathan

தெரிந்துகொள்வோமா? வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும் 25 ஆரோக்கிய உணவுகள்!

nathan

சத்தான சுவையான கொள்ளு பொடி

nathan