27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
28 kunukku
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ்

குணுக்கு என்பது பல்வேறு பருப்புக்களை கொண்டு அடை மாவு போல் அரைத்து செய்யக்கூடிய ஒரு சத்தான ஸ்நாக்ஸ். ஆனால் இங்கு வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு எப்படி குணுக்கு செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுங்கள்.

மேலும் இந்த குணுக்கு ஸ்நாக்ஸானது போண்டா போன்று இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது குணுக்கு ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Kunukku: Evening Time Snacks Recipe
தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 1 பெரிய கப்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சோடா உப்பு சேர்த்து கலந்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், குணுக்கு ரெடி!!!

Related posts

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

nathan

தாளித்த கொழுக்கட்டை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை

nathan

ஜவ்வரிசி பக்கோடா

nathan

பச்சைமிளகாய் காரச் சீடை

nathan

நார்த்தம்பழ சேமியா ரவா கிச்சடி

nathan

அரிசி ரொட்டி

nathan

அவல் – பொட்டேட்டோ மிக்ஸ்

nathan

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

nathan