Th
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? வயதிற்கு வந்த பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும்?

குழந்தைகளை வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியது முக்கியம். நாம் எந்த அளவுக்கு அவர்களின் மீது அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ அவர்கள் சரியான பாதையில் செல்ல முக்கிய பங்கு வகிக்கும்.

ஆனால், சில பெற்றோர்கள் சிறுவயது வரை குழந்தைகளை கவனித்துவிட்டு, டீனேஜில் கவனிக்க தவறிவிடுகின்றனர். இதனால், பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சில குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை விமர்சிப்பதை விட, அவர்களின் கனவுகளைத் தொடர அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.

அவர்களின் சிறிய முயற்சிகளை பாராட்ட தவறவிடக்கூடாது. உங்கள் பிள்ளையை மதிய உணவு அல்லது பிக்னிக்குகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை உருவாக்குங்கள்.

அதை ஒரு பழக்கமாக வைத்து, அதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். மேலும், அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் எதிர்கால திட்டத்தைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள்.

அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள், அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் ஏதாவதொரு பிரச்சனையுடன் உங்களிடம் வந்தால், அவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்குங்கள்.

முக்கியமாக உங்கள் குழந்தைகளை நீங்கள் எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள், எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக அவர்களிடம் தெரிவியுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளின் நியாபக சக்தி அதிகரிக்க, தினமும் இதை 2 முறை செய்தாலே போதும்!

nathan

பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய்

nathan

உங்களுக்கு தெரியுமா ஜாதகத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் அடக்கினால் என்ன ஆகும்?..!!

nathan

உஷார்… உங்களுக்கும் இப்படி நடக்கலாம்.! நாட்டு கோழி முட்டையை நம்பாதிங்க..!

nathan

மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமா வந்தாலும் ஆபத்து.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மது அருந்தும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா? கூடாதா?

nathan

கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோயால் அவதி- ஆய்வில் தகவல்

nathan

எதிர்மறையான எண்ணங்கள் நீங்க வேண்டுமா? ஈஸியான பரிகாரம் இதோ

nathan