22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
21 6189fc786a
அழகு குறிப்புகள்

மீண்டும் சூடுபடுத்தி மட்டும் சாப்பிடாதீங்க! விஷமாகும் 5 உணவுகள்

இன்று பெரும்பாலான மக்கள் உணவுகளை பிரிட்ஜில் சேமித்து வைத்து அவ்வப்போது சூடுபடுத்தி சாப்பிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

இவ்வாறு உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறிகின்றனர்.

குறிப்பிட்ட சில உணவுகளை இவ்வாறு செய்வதால், அது விஷமாகவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுவதுடன், ஊட்டச்சத்து, சுவை ஆகியவை குறித்த உணவில் இல்லாமல் போவதுடன், பல நோய்களுக்கும் வழிவகுக்கின்றது.

கீரை (Spinach)
குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடவே கூடாது உணவுப்பட்டியலில் கீரை முதலாவதாக இருக்கின்றது. கீரையை சூடுபடுத்தி சாப்பிடும் போது அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறிவதுடன் புற்றுநோயை ஏற்படுத்துகின்றதாம்.

உருளைக்கிழங்கு (Potato)
பலரும் விரும்பி உண்ணும் உருளைக்கிழங்கினையும் பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதனை சூடாக்கும் போது, அரிய வகை நுண்ணுயிரிகளின் வளர்ச்சி ஏற்படுவதுடன், செரிமான அமைப்பில் எதிர்மறையான பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

முட்டை (Egg)
அதிக அளவு புரோட்டீன் சத்து காணப்படும் முட்டை உடம்பிற்கு பல நன்மைகளை அளிக்கின்றது. முட்டையை சமைத்த உடனேயே உட்கொள்ள வேண்டும். பொறித்த மற்றும் அவித்த முட்டைகளை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் எதிர்மறையான விளைவினை ஏற்படுத்துவதுடன் வயிறு வலியும் ஏற்படுகின்றது.

சிக்கன்(Chicken)
முட்டையைப் போலவே, சிக்கனிலும் புரதம் நிறைந்துள்ளது. மேலும் சிக்கனை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனையும் ஏற்படும். எனவே மீண்டும் சூடாக்கிய பிறகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சாதம் (Rice)
ஏழைகளின் பசியை அதிகமாக போக்கும் உணவாக இருக்கும் அரிசி சாதத்தினையும் தற்போது பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடாக்கி சாப்பிடும் வழக்கத்தினை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் மிகப்பெரிய பிரச்சினைகளை மட்டுமின்றி விஷமாகவும் மாறிவிடும்.

Related posts

தொழில் தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை- தெரிந்துகொள்வோமா?

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.

nathan

கருவளையத்திற்கு தீர்வு தரும் எலுமிச்சை

nathan

வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம்…..

sangika

உங்களுக்கு ரொம்ப ஒல்லியா இருக்கோமேன்னு வருத்தமா? இத ஊற வச்சு தினமும் சாப்பிடுங்க!!

nathan

அம்மா நடிகையின் மோசமான டான்ஸ் வீடியோ ! ‘ஊ சொல்றியா’ பாட்டுக்கு ஆடுற வயசா இது..

nathan

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு

nathan

பாத் உப்பை பயன்படுத்தி வருவதால் சருமத்திற்கு என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும்…..

sangika