24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
17 pepper poha
சமையல் குறிப்புகள்

சுவையான மிளகு அவல்

மாலையில் குட்டி டிபன் போன்று ஏதேனும் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், மிளகு அவலை முயற்சித்துப் பாருங்கள். அதிலும் பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் போன்று இருக்கும். மேலும் குளிர்காலத்தில் டீ/காபி குடிக்கும் போது, இதனை செய்து சாப்பிடலாம்.

இங்கு அந்த மிளகு அவலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

Pepper Poha Recipe
தேவையான பொருட்கள்:

அவல் – 3/4 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை:

முதலில் மிளகை வாணலியில் போடடு வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.

பின் முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பெப்பர் அவல் ரெடி!!!

Related posts

சுவையான மஞ்ச பூசணி சாம்பார்

nathan

சுவையான… தக்காளி சாம்பார்

nathan

சுவையான தக்காளி குருமா

nathan

சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

nathan

உருளைக்கிழங்கு குருமா

nathan

வெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு!…

sangika

சூப்பரான தேங்காய் பொடி சாதம்

nathan

மீல் மேக்கர் ப்ரை

nathan

தோசை குருமா

nathan