28.6 C
Chennai
Tuesday, Nov 5, 2024
21 6181b2b58
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகள் வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

வல்லாரை கீரை சக்தி மிக்க ஒரு மூலிகை. இந்த கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு விடயத்தில் ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.

சிலர் கீரை வகைகளை கூட தவிர்த்து விடுவார்கள். வல்லாரையை நீரிழிவு நோயாளிகள் அச்சம் இன்றி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஹைப்போகிளைசீமியா போன்ற நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க வல்லாரை உதவுகிறது.

எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் வல்லாரையை உணவில் சேர்த்து வரலாம். இது உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தரும். இப்பொழுது வல்லாரைக்கீரையின் ஏனைய மருத்துவப் பயன்கள் பற்றிப் பார்ப்போம்.

 

 

  1. வல்லாரை இலையை சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளைச் சோர்வை நீங்கும். தினமும் வல்லாரை சாப்பிட்டால் ஞாபக மறதியைக் குணமாக்கும்.
  2. வல்லாரை இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.
  3. குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
  4. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  5. வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும்.
  6. பல் ஈறுகளைப் பலப்படுத்தும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும்.
  7. காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.
  8. வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.
  9. நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது.
  10. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
  11. யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும்.
  12. அதுபோல விரைவீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.
  13. வல்லாரை இலையை முறைப்படி எண்ணெயாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும்.
  14. உடல் எரிச்சல் நீங்கும்.

Related posts

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களை அடிக்கடி வாங்குபவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்!

nathan

காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் – ஆய்வில் தகவல்!

nathan

சுவையான! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?

nathan

இந்த உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்

nathan

சளித்தொல்லைக்கு உகந்த தூதுவளை ரசம்

nathan

உணவின் அளவுகோல் எது? தெரிஞ்சிக்கங்க…

nathan