மலச்சிக்கல் என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான உடல்நலக் கோளாறாகும். உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பிரச்சனை இது உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, செரிமான கோளாறுகள் போன்றவை மலச்சிக்கலுக்கு காரணமாகும்.
பொதுவாகவே மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்றால் நம் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம்.
இன்னும் சிலர் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது என்று கூறுவர். ஆனால், உண்மையில் நிறைய தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.
தற்போது அதிக தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலை ஏற்படுத்துமா? இல்லை? இதற்கு என்ன தீர்வு உண்டு என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
அதிகமான தண்ணீர் அருந்துவதால் மலச்சிக்கல் ஏற்படுமா?
கடினமான மலச்சிக்கலுக்கு பொதுவான காரணம் நீரிழப்பு ஏற்படுவது ஆகும். நீங்கள் அருந்தும் நீர் மற்றும் பிற திரவங்கள் தான் குடல் வழியாக உணவை நகர்த்த உதவி, குடல் இயக்கத்தைத் தூண்டுகின்றன.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில், உங்களுக்கு மெதுவான செரிமானம் நிகழும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் இது போன்ற மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை.
மலச்சிக்கலில் இருந்து எப்படி விடுபடுவது ?
- பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், ஓட்ஸ், கோதுமை, சியா விதைகள் மற்றும் நட்ஸ் வகைகளில் அதிக அளவில் நார்ச்சத்துகள் நிறைந்து உள்ளன.
- ஒருவர் ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
- இருப்பினும் அதிக அளவு நார்ச்சத்து உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் மோசமடையும். எனவே ஒரு நாளைக்கு நார்ச்சத்து 70 கிராமுக்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.