மருத்துவ குறிப்பு

கண்ணை மூடுனதுமே தூங்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

எதை எடுத்தாலும் அதில் வேகத்தை எதிர்பார்க்கும் நமது எண்ணத்தின் வெளிப்பாடினால் ஏனோ, தூக்கம் மட்டும் படுத்ததும் வேகமாக வருவதில்லை. பலருக்கு வருவதேயில்லை! அப்போது உடனே நமது ஆட்கள் மருத்துவரை அணுகி ஏதோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை போல இதற்கு ஏதாவது மருந்து உண்டா, சிகிச்சை உண்டா என நச்சரித்து விடுவார்கள். இதில் தூங்குவதற்கு அதை சாப்பிடுங்கள், இதை சாப்பிடாதீர்கள் என நெட்டில் உலாவும் போலி வல்லுனர்கள் வேறு அவர்களது விரலுக்கு வந்ததை எல்லாம் எழுதிவிடுவார்கள். அதை படித்துவிட்டு உள்ளூர் சந்தையில் கிடைக்காததை ஆன்-லைனில் எல்லாம் ஆர்டர் செய்து நம்ம ஆட்கள் வாங்கி வாங்கி சாப்பிடுவார்கள் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை யாரும் அவர்களுக்கு சொல்வதில்லை.

 

உண்மையிலேயே தூக்கம் என்பது நமது மனதும், மூளையும் சார்ந்த விஷயம். உங்களுக்கு எவ்வளவு மன நிம்மதி இருக்கிறதோ, அந்த அளவு தான் தூக்கம் வரும். என்ன உணவும் சாப்பிட்டாலும், உங்கள் மனநிலை சரியில்லை எனில் தூக்கம் வராது என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல தூக்கம் வேண்டுமெனில் உங்கள் மனநிலையும், சுற்றுப்புற சூழ்நிலையும் அமைதியாக இருந்தாலே போதும், தூக்கம் கண்ணை மூடியதுமே உங்களை தொற்றிக் கொள்ளும்…

 

நிசப்தமான சூழ்நிலை

நீங்கள் உறங்குவதற்கு செல்லும் முன் உங்கள் சூழலை அமைதியாக இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் உங்களுக்கு பிடித்தமான மென்மையான பாடல்களை கேளுங்கள். தன்னை மறந்து தூங்கிவிடுவீர்கள்.

உடல்நிலை

உங்கள் உடல் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யோகா செய்வது உங்கள் மனம் மற்றும் உடலை இலகுவாக செய்யும். தூங்குவதற்கு முன் இதமான நீரில் குளித்துவிட்டு வந்து படுத்தால் கூட நல்லது, இதுவும் உங்களது உடலை இறுக்கமின்றி இருக்க உதவும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எழுதுங்கள்

உங்களுக்கு தெரியுமா நீங்கள் இரவு நேரங்களில் ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால் தூக்கம் வந்துவிடுமாம். மாணவர்கள் மட்டுமல்ல சில சமயம் கவிஞர்கள் கூட எழுதிக் கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்களாம். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

வெப்பநிலை

நீங்கள் தூங்கும் அறையின் வெப்பநிலையை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் சூடாகவும் இருக்ககூடாது மற்றும் மிகவும் குளிராகவும் இருக்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் உடல் பாகங்களை தொந்தரவு செய்யும். அதனால் உங்கள் அறையின் தட்பவெட்ப நிலையை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ரிலாக்ஸ்

இன்றைய நாளில் உங்களுக்கு மனநிலை சந்தோசமாக இருந்தாலும் சரி, வேதனையாக இருந்தாலும் சரி தூங்கும் முன் அனைத்தையும் மறந்து ரிலாக்ஸாக இருங்கள். யோகா செய்வதனால் உங்கள் மனது சீக்கிரம் ரிலாக்ஸ் ஆகும். இது உங்களுக்கு நல்ல உறக்கத்தை தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button