31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள் OG

வயிற்றுப் பகுதி தசைகளுக்கு வலிமை தரும் அப்டாமினல் க்ரன்சஸ்

பெரும்பாலான பெண்கள், 30 வயதை நெருங்குவதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். இவர்கள் சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் த‌சைகளை இறுக்கி, உடலை ஃபிட்டாக்கும்.

அப்டாமினல் க்ரன்சஸ் பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் ஃபிட்டான வயிற்றுப்பகுதியை பெறலாம். இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டிகளை மடக்கியபடி வைக்க வேண்டும். கைகளை மடித்து, தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும்.

பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். கால்களை நகர்த்தாமல், உடலை முன்புறமாக உயர்த்த வேண்டும். எந்த அள‌வுக்கு முடியுமோ அந்த அள‌வுக்கு உடலை முன்னோக்கிக் கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி ஆரம்பத்தில் 25 முறைகள் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பலன்கள்: வயிற்றுப் பகுதி தசைகள் இறுகி, வலுவடையும். முதுகு வலி, குறையும். வயிறு அழகான வடிவம் பெறும்.

 

 

Related posts

நெஞ்சு சளி மூச்சுத்திணறல்

nathan

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

nathan

வாயு அறிகுறிகள்

nathan

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்

nathan

பெண்கள் எப்படி சுலபமாக இச்சையை அடக்கி விடுகிறார்கள்?

nathan

பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க காரணங்கள் !

nathan

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பில் வலி

nathan

இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை குணப்படுத்தும்!

nathan

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு எப்படி சேமிப்பது என்று தெரியுமா?

nathan