22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
aloevera 162
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…இந்த ‘ஒரு பொருள்’ இருந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக போக்கலாம் தெரியுமா?

நாம் அனைவருமே நம் வாழ்வில் நிச்சயம் சரும பிரச்சனைகளை சந்திப்போம். இப்படி சந்திக்கும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பல்வேறு சரும பராமரிப்பு பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு பொருட்கள் அனைவருக்குமே பொருந்தாது. சிலருக்கு அது அழற்சியை ஏற்படுத்தும். அதற்கு சிறந்த மாற்று வழி இயற்கைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பது தான். அப்படி பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஓர் பொருள் தான் கற்றாழை ஜெல்.

Unknown Benefits Of Aloe Vera Gel In Skincare In Tamil
கற்றாழை பெரும்பாலான வீடுகளில் பொதுவாக வளர்க்கப்படும் ஓர் செடி. இந்த கற்றாழையில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளதல், இது பல வீட்டு வைத்தியத்தில் மட்டுமின்றி, பல சரும பராமரிப்பு பொருட்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு கற்றாழை ஜெல்லை எந்த விதமான சரும பிரச்சனைகளுக்கு, எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

கருவளையங்களைப் போக்கும்

கண்களின் அழகைக் கெடுக்கும் வண்ணம் கண்களைச் சுற்றி வரக்கூடியது தான் கருவளையங்கள். ஒருவருக்கு கருவளையங்கள் தூக்கமின்மை, கண்களில் அதிகப்படியான அழுத்தம் மற்றும் அதிகளவு காப்ஃபைன் உட்கொள்ளல் போன்றவற்றால் வருகிறது. இப்படி வரும் கருவளையங்களைப் போக்க கற்றாழை ஜெல்லை தினமும் இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் மறைவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

சரும கருமையை குறைக்கும்

கற்றாழை ஜெல்லில் அலோயின் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க சிறப்பாக செயல்படும் ஓர் பொருள். அதற்கு கற்றாழை ஜெல்லை கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் குறைந்துவிடும்.

முதுமைத் தோற்றத்தைப் போக்கும்

கற்றாழை ஜெல்லானது சருமத்தில் கொலாஜனை உருவாக்கும் செல்களை அதிகரிக்கும் மற்றும் இதில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோ வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

முகப்பருக்களைக் குறைக்கும்

கற்றாழை ஜெல் முகப்பருவைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் காலை மற்றும் மாலையில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், முகமானது பருக்களின்றி காணப்படும்.

நல்ல மேக்கப் ரிமூவர்

ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதைக் கொண்டு தினமும் இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் அந்த கலவையை நனைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு மேக்கப் போட்டிருந்தால், அது எளிதில் வெளியேறி, முகம் பளிச்சென்று இருப்பதோடு, நீரேற்றத்துடனும் இருக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பலா பழத்தை இப்படியெல்லாம் சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து?

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் 12 சிறந்த உணவுகள்!!!

nathan

இதயம் காக்கும்… கொழுப்பைக் குறைக்கும்… நம்ம ஊரு நிலக்கடலை!

nathan

சிகப்பு அரிசியின் நன்மைகள் (Sigappu Arisi Benefits in Tamil)

nathan

உணவின் அளவுகோல் எது? தெரிஞ்சிக்கங்க…

nathan

கொழுப்பு குறைவாக உள்ள புடலங்காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்

nathan

உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்!!!

nathan

வளரும் இளம் பருவ பெண்கள்: என்னென்ன சாப்பிடலாம்

nathan

சூப்பரான வெண் பொங்கல்

nathan