sl748
அசைவ வகைகள்

சில்லி சிக்கன்

எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தேக்கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தேக்கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தேக்கரண்டி
சோயா சாஸ் : 2 தேக்கரண்டி
சில்லி சாஸ்: 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு

எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தேக்கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தேக்கரண்டி

*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
*ஒரு முட்டையுடன் ஒரு தேக்கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,
உப்பு, ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
*ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.
* சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தேக்கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.
சில்லி சிக்கன் தயார்.
sl748

Related posts

எப்படி சுறா புட்டு செய்வது?

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

பட்டர் சிக்கன்

nathan

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா

nathan

கணவாய் மீன் பொரியல்

nathan

மட்டன் குருமா

nathan

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

nathan

புதினா ஆம்லேட்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குக்கரில் சிக்கன் பிரியாணி குழையாமல் செய்வது எப்படி

nathan