28.5 C
Chennai
Monday, Nov 18, 2024
21 6176fc475c
ஆரோக்கியம் குறிப்புகள்

கற்றாழையை இப்படி சாப்பிட்டால் உயிருக்கு பேராபத்து?தெரிஞ்சிக்கங்க…

கற்றாழையை ஏழு முறை கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும் இயற்கை கொடுத்த சக்தி வாய்ந்த ஒரு அற்புத மூலிகை என்றால் அது கற்றாழை மட்டுமே.

கோடிக்கணக்கில் செலவு செய்து பல மருத்துவ பொருட்களை பயன்படுத்துவதை விடவும் ஒரு சிறிய துண்டு கற்றாழையில் பல நன்மைகளை அடைய முடியும்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கற்றாழையில் என்ன இருக்கிறது என்பதை விட என்ன இல்லை என்று கேட்கக்கூடிய அளவுக்கு உடலைக் காப்பதில் கற்றாழைக்கு நிகர் எதுவுமே இல்லை.

 

கற்றாழையில் பல வகை உண்டு. எனினும் இவற்றில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது. வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் தான் மருத்துவ குணம் அதிகம்.

அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும்.

பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற ஆபத்துக்களை ஏற்படுத்தும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

கற்றாழையின் மருத்துவ குணங்கள்
சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.
இது ஒரு கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது.
இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன. கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும். தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும்.
வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும்.
கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும்.
கற்றாழையின் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.
முகத்துக்கு பூசும் கிரீம்கள், நகத்துக்கு பூசும் நகப்பூச்சு பொன்றவை இந்த கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது. முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம்.
உடலுக்குத் தேவையான நேரம் எதிர்ப்பு சக்தியை கற்றாழை வழங்குகிறது. நீடித்த மலச்சிக்கலை போக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும், வயிற்றின் சூட்டை தடுக்கவும், தீராத வயிற்று புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது.
கற்றாழைச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் அசராத வறட்டு இருமல் நம்மை விட்டு வேகமாக விலகும். நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
மோர் சேர்த்துக் குடித்தால் உடல் சூடு தணியும். வெயிலால் தோலுக்கு உண்டாகும் ஒவ்வாமை மற்றும் முகத்தில் வரக்கூடிய கருந்திட்டுகள் நீங்கும். கற்றாழையுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச் சாறு சேர்த்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். உடலில் உள்ள கொழுப்பு கரையும், பித்தமும் குறையும்.
யாரெல்லாம் கற்றாழையை சாப்பிட கூடாது?
சிலருக்கு கற்றாழை ஜெல் ஒவ்வாமை இருக்கலாம். இதனால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே, நீங்கள் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு சிறிய பகுதியில் சோதித்து எந்த ஒவ்வாமையும் ஏற்படாத பட்சத்தில் உங்கள் முகத்தில் தடவவும்.

எரியும் உணர்வு ஏற்பட்டால் பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோய்க்கான மருந்து எடுத்து கொள்ளும் போது கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது.

ரத்த அழுத்தம், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டாம்.

கற்றாழையும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு உண்டாக வாய்ப்புள்ளது.

வேறு ஏதாவது நோய்க்கு ஆங்கில மருந்து எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள், ஒவ்வாமை பிரச்சினை உடையவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்த வேண்டாம்.

முக்கிய குறிப்பு

கற்றாழை ஜூஸ் குடித்த ஒரு மணி நேரம் வரை வேறு எந்த உணவும் உண்ணாமல் இருப்பது நல்லது. கற்றாழை ஜூஸை மாலை நேரங்களிலும் குடிக்கலாம்.

Related posts

பெண்களுக்கு கணக்கற்ற நன்மைகளை அளிக்கும் ‘கடலை எண்ணெய்’

nathan

திருமணமான பிறகு பெண்களே ‘இந்த’ விஷயங்கள நீங்க கட்டாயம் செய்யணுமாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

வெளியே செல்லும் முன் செய்யக்கூடிய எந்தெந்த செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று பார்க்கலாம் வாங்க!…

sangika

தெரிஞ்சா ஷா க் ஆயிடுவீங்க! திருமணத்தில் இணையக்கூடாத ராசிகள்

nathan

முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கும் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அலுவலகம் செல்லும் போது கட்டாயம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்!

nathan

வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடலாமா?

nathan

சருமத்தை குளிர்ச்சியாக வைக்கும் பழ பேஸ் பேக்!

nathan

ஹேர் மாஸ்க் உங்க அனைத்து முடி பிரச்சனைகளை சரிசெய்யுமாம்!இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan