27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
Drink Pangandaran
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

இளநீர் நமது உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புக்கள் அடங்கிய பானம். இதை பருகும்போது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து உடலின் செயல் திறனையும் அதிகரிக்கும்.

இளநீரில் நம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன.

100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.

இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். இளநீரில் இருக்கும் சோடியம் உப்பு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கவும், தசை பகுதியில் அதிகமாக சுண்ணாம்பு சத்து தங்க விடாமல் தடுக்கவும் உதவுகிறது.

இளநீர் இளமையை பாதுகாக்கும் அரிய பானம். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறுதுணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது. 100 கிராம் இளநீரில் 312 மி.கி. பொட்டாசியமும், 30 மி.கி. மெக்னீசியமும் உள்ளது. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்ச்சியையும், வலுவையும் ஊட்டும்.

ஒரு இளநீர் நீங்கள் பருகினால் உங்கள் உடலுக்கு 37 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன. பாஸ்பரஸ் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும். வைட்டமின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எல்லோருமே பளபளப்பான சருமத்திற்கு ஆசைப்படுகிறார்கள். அதற்கு தேவையான கந்தகம் உப்பு 24 மி.கி. இளநீரில் இருக்கிறது. கந்தக உப்பு ரத்தம் சுத்தம் அடையவும், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவும். தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் துணை புரியும்.

உணவு எளிதில் ஜீரணமாகுவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால், செரிமான உறுப்பு கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது இளநீர் அருந்தக் கொடுக்கலாம்.

Courtesy: MalaiMalar

Related posts

உடல்சூட்டை குறைக்கும் நாட்டு வைத்தியம்!சூப்பர் டிப்ஸ்….

nathan

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற எப்படி உணவுப் பழக்கம் பின்பற்ற வேண்டும்!!!

nathan

கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

சுடச்சுட பூரி செய்து சாப்பிடலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கடுகு எண்ணெயை அன்றாட சமையலில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை சாறு

nathan

அடிக்கடி காய்ச்சல் மற்றும் பிற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது எப்படி…?

nathan

உணவென்ற பெயரில் விற்கப்படும் போலி உணவுகள்!! – உஷாரய்யா உஷாரு!!!

nathan