பொதுவாக ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மீதே பலருக்கும் அதிக பாசம் இருக்கும். அப்பாவிற்கு செல்ல என்றால் அது பெண் குழந்தைகளாக தான் இருப்பார்கள்.
அம்மாவிற்கு மிகப்பெரிய உதவியாக பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். முதலில் பெற்றோர்கள் உங்கள் பெண் பிள்ளைகளை தைரியமாகவும், தானாகவே சாதிக்ககூடியவர்களாகவும் வளர்க்க வேண்டும் அதற்கு அனுமதியையும் அளிக்க வேண்டும்.
அடுத்ததாக, அம்மாக்கள் மகளிடம் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்க கூடாது என சொல்லி கொடுக்க வேண்டும்.
எல்லா குணத்தை வார்த்தையால் சொல்லிக்கொடுப்பதை விட அதை நாம் செய்யும் செயல்கள் மூலமாக அவர்களுக்கு வெளிக்காட்டலாம்.
என்னதான் பெண் பிள்ளைகள் அப்பாவுக்கு செல்லபிள்ளையாக இருந்தாலுமே அம்மாவை தான் ஒரு ரோல் மாடலாக நினைத்துகொள்கிறார்கள்.
கடின உழைப்பு தீவிர முயற்சி போன்றவற்றை வெளிக்காட்டலாம். மேலும், மகள்களுக்கு முக்கியமாக அடுத்தவரிடம் ஒப்பிட்டு பேசுவதை விட தன்னைத்தானே நேசிக்கும் பழக்கத்தை சொல்லி தர வேண்டும்.
அவர்களுக்கு எப்பொழுதும் முழு சுதந்திரத்தை நீங்கள் அளிக்க வேண்டும். அதேப்போல் உங்கள் மகள்கள் கூற வரும் கருத்தையும் நீங்கள் செவி சாய்த்துகேட்டு அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.