27 C
Chennai
Wednesday, Nov 20, 2024
kidney stone
மருத்துவ குறிப்பு

சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி…?

வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் ஆரம்பமாகும். அப்படி கோடையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரக கற்கள். இந்தியாவில் மட்டும் சிறுநீரக கற்களால் கிட்டத்தட்ட 5-7 மில்லியன் மக்கள் கஷ்டப்படுகின்றனர். மற்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் கோடையில் தான் சிறுநீரக கற்கள் அதிகம் ஏற்படும். அதிலும் கோடையில் அதிகப்படியான வெயிலினால் 40% அதிகமாக சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்புள்ளது. காலநிலை, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவை தான் சிறுநீரக கற்கள் வருவதற்கு முக்கிய காரணிகளாகும்.

அதுமட்டுமின்றி, கோடையில் கொளுத்தும் வெயிலினால் உடலில் இருந்து அதிகப்படியான நீரானது வியர்வையின் வழியே வெளியேறுகிறது. இருப்பினும் பெரும்பாலான மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்காமல், உடலில் நீர் வறட்சி ஏற்படுகிறது. இப்படி உடலில் வறட்சி ஏற்படுவதால், சிறுநீரின் அடர்த்தி அதிகரித்து, அதனால் சிறுநீரக கற்கள் உருவாகிறது.

சரி, இப்போது கோடையில் சிறுநீரக கற்கள் உருவாவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

கோடையில் பகலிலும், இரவில் படுக்கும் முன்னும் தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதோடு, ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். கோடையில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், அவை சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். எனவே கோடையில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ்

கோடையில் தாகத்தை தணிக்க எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதன் மூலட், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

ஆக்ஸலேட் உணவுப் பொருட்களை தவிர்க்கவும்

கோடையில் ஆக்ஸலேட் என்னும் ஆசிட் அதிக அளவில் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்ஸலேட் சிறுநீரக கற்களை உருவாக்கும். இந்த ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களாவன சோடா, ஐஸ் டீ, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் போன்றவை.

காப்ஃபைனைக் குறைக்கவும்

காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும்.

உப்பை தவிர்க்கவும்

கோடையில் உணவில் உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். அப்படி உப்பை அதிகம் சேர்த்தால், அதுவும் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.

விலகுங்களின் புரோட்டீன்

விலங்குகளின் புரோட்டீன்களை எடுத்து வரவும். அதிலும் இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை எடுத்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பியூரின்ஸ் என்னும் பொருள் யூரிக் ஆசிட்டாக மாற்றும்.

சாலட்டுகளை எடுக்கவும்

கோடையில் அதிக அளவில் சாலட்டுகளை எடுத்து வர வேண்டும். இதனால் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியை தவறாமல் தினமும் செய்து உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

Related posts

40 வயதிற்கு மேல் குழந்தைக்கு திட்டமிடுகிறீர்களா?நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

nathan

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

nathan

ஜலதோஷம் போக்கும் வெற்றிலை ரசம்!

nathan

சிறுநீரக கற்கள் – Dr.க.சிவசுகந்தன்

nathan

சிறுநீரக‌ கோளாறுகளுக்கு சித்தர் வைத்தியம்! சூப்பர் டிப்ஸ்…

nathan

எவ்வளவு சாப்பிட்டாலும் உங்க உடம்பு தேறமாட்டேங்குதா? அப்ப இத படிங்க!

nathan

குறும்பு செய்யும் பள்ளித்தோழர்களை சமாளிப்பது எப்படி?

nathan

கர்ப்பமாவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய 5 பரிசோதனைகள்

nathan

நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan