21 616bb8ba3
சமையல் குறிப்புகள்

சுவையான மல்லிகைப் பூ போல இட்லி வேண்டுமா?

தமிழர்களின் பாரம்பரிய உணவில் இட்லிக்கு என்று தனி இடம் இருக்கிறது. தினமும் காலையில் அவித்த வேக வைத்த உணவுகளை உண்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

நாகரீகம் வளர வளர உணவு முறைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டு அது உடலுக்கு ஆபத்தை கொடுப்பதாகவும் இருக்கின்றது.

இட்லி அரைத்தமா பக்கட்டுகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றது. இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உணவாக மாறுகின்றது.

காசு கொடுத்து ஆபத்தை வாங்குவதை விட செலவே இல்லாமல் வீட்டிலேயே மல்லிகைப் பூ போல இட்லி மிருதுவாக தயாரிக்கலாம்.

இட்லி மாவு தயாரிக்க உடைத்த அல்லது முழு உளுந்து தான் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு உளுந்து பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு நல்லது.

இட்லி செய்வதற்கு வேண்டிய பொருட்கள்

உளுந்து – 1 கப்
அரிசி – 4 கப்
உப்பு – 3 டீ ஸ்பூன்
வெந்தயம் -1/2 டீ ஸ்பூன்
செய்முறை
முதலில் அரிசியையையும், உளுந்தையும் 3 மணி நேரத்திற்கு தனித்தனி பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். சிலர் அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் சேர்த்து ஊற வைப்பார்கள்.

அது சரியல்ல. தனித்தனியாக ஊற வைத்து செய்தால் இட்லி மென்மையாக வரும். மாவு அரைக்க பயன்படுத்தும் இயந்திரங்களை பொருத்தும்கூட இட்லியின் தன்மை மாறுபடும். வெட் கிரைன்டர் பயன்படுத்துவது நல்லது.

இது அரிசி மற்றும் உளுந்தை மிகவும் மென்மையாக அரைத்துவிடும். இதனால் இட்லியும் மல்லிகைப் பூ போல கிடைக்கும். மிக முக்கியம், அரிசி, உளுந்து ஆகியவற்றுடன் வெந்தயத்தையும் சிறிதளவு ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

இவை இட்லியை மிருதுவாக்கும். இப்படி மிருதுவான இட்லியுடன் தேங்காய் சட்னி வைத்துச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி!

Related posts

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு

nathan

5 கிலோ குறைக்கனுமா? இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்!

nathan

மாம்பழ பூரி

nathan

காலிஃப்ளவர் குருமா!

nathan

சுவையான கேரட் பஜ்ஜி

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

மட்டன் கொத்துக்கறி ரெசிபி

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் காளான் குருமா…

nathan