01 oats kozhukattai recipe
ஆரோக்கிய உணவு

டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஓட்ஸ் கொழுக்கட்டை

டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இந்த ஓட்ஸ் பலருக்கு பிடிக்காது. இதற்கு காரணம் அது பிசுபிசுவென்று இருப்பது தான். ஆனால் இந்த ஓட்ஸை பலவாறு சமைத்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? அதிலும் அப்படி வித்தியாசமாக சமைக்கும் ஓட்ஸ் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

இங்கு ஓட்ஸைக் கொண்டு எப்படி கொழுக்கட்டை செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இது மாலையில் ஸ்நாக்ஸ் போன்று செய்து சாப்பிட மட்டுமின்றி, காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளக்கூடியவாறு இருக்கும்.

Oats Kozhukattai Recipe
தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 1/4 கப்
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை:

முதலில் ஓட்ஸை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

நீரானது நன்கு கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு இட்லி தட்டில் மற்றும் கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, அதனை கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்து, பின் இந்த தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஓட்ஸ் கொழுக்கட்டை ரெடி!!!

Related posts

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி

nathan

உங்களுக்கு தெரியுமா தேனுடன் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு கரைந்து விடும்…

nathan

இரவில் தூங்குவதற்கு முன் பசித்தால் மீன் சாப்பிடலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

நெத்திலி கருவாட்டு தொக்கு

nathan

வெண்டைக்காய் சாப்பிட்டால் நல்லா கணக்கு போடலாம்!

nathan

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? தெரிஞ்சிக்கங்க…

nathan

சுடுதண்ணீரில் தேன் கலந்து குடித்தால் எடை குறையுமா?

nathan

அற்புத பழம், சீத்தா பழம்!…

sangika

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் ஜூஸ்

nathan