33.1 C
Chennai
Wednesday, Apr 30, 2025
21 6167c244a
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? ஏலக்காய் டீ தொடர்ந்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்

ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது.

அதன் சுவை, மணம் உள்ளிட்ட பண்புகளால், பானங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை தயாரிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. பழங்காலம் தொட்டு இது இந்திய சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் டீ போட்டு குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

 

  • மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
  • ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
  • உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் டீயை குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஒட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறையும். தலைவலி அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் தலைவலி விரைவில் குணமடையும்.
  • செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும்.
  • ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
  • வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

Related posts

நல்லெண்ணெயை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

வீட்டில் போடும் சாம்பிராணியில் இந்த பொருள்களை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சுவையான வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

nathan

காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் – ஆய்வில் தகவல்!

nathan

மீன் எப்படி வாங்கணும் தெரியுமா ? அப்ப இத படிங்க!

nathan

ருசியான சிக்கன் போண்டா செய்ய…!!

nathan

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள்

nathan

Food Poison ஆயிடுச்சா? இதோ எளிய நிவாரணம்! இயற்கை வைத்தியம் இருக்கு!

nathan

மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது கிடைக்கும் நன்மை!….

sangika