25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
baby corn pepper fry
சிற்றுண்டி வகைகள்

சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை

பேபி கார்னில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக இருப்பதால், இவை உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்த ஒரு உணவுப் பொருளும் கூட. ஆகவே வாரம் ஒருமுறை பேபி கார்னை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

அதுவும் பேபி கார்னை பெப்பர் ப்ரை செய்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். இங்கு அந்த பேபி கார்ன் பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Baby Corn Pepper Fry
தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 10
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 8 பல் (நறுக்கியது)
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் பேபி கார்ன்னை வட்டமாக நறுக்கி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள பேபி கார்ன், தக்காளி சாஸ், மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை ரெடி!!!

Related posts

பிரட் பீட்ரூட் பால்ஸ்

nathan

சுவையான ஆனியன் வரகரிசி அடை

nathan

ஹராபாரா கபாப்

nathan

சுவையான … இறால் வடை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

nathan

டபுள் டெக்கர் பரோட்டா

nathan

உளுந்து வடை

nathan

சுவையான தக்காளி பஜ்ஜி

nathan

கம்பு தயிர் வடை

nathan