27.3 C
Chennai
Sunday, May 19, 2024
th
ஆரோக்கிய உணவு

கெட்ட கொழுப்புகளை அடித்து விரட்டும் வாழைத்தண்டுப் பச்சடி

சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும்.

இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.

தேவையான பொருட்கள்

நார் நீக்கி பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சீரகம் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும்.

அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும். சூப்பரான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.

Related posts

சூப்பரான மசாலா மோர்

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

உணவே மருந்து !!!

nathan

செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் என்ன நன்மைகள்…

nathan

அன்றாடம் பருப்பு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan

பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர்

nathan

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

nathan

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்

nathan