tamil 1
மருத்துவ குறிப்பு

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அல்சருக்கான அறிகுறிகள்!!!

அல்சர் என்றால் பலருக்கும் வயிற்று வலி அடிக்கடி வரும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அல்சர் உள்ளது என்பதை வேறு சில அறிகுறிகளும் உணர்த்தும். பொதுவாக அல்சர் என்பது செரிமான திரவம் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதால் வருவதாகும். இப்படி ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் செரிமான திரவத்தால் இரைப்பை சுவர்களில் அல்லது சிறுகுடலின் ஆரம்பத்தில் புண் ஏற்பட்டு கடுமையான வலி உண்டாகும்.

 

இங்கு உங்களுக்கு அல்சர் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால் உடனே மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சையைப் பெறுங்கள். இல்லாவிட்டால், அந்த அல்சர் புற்றுநோயாக மாறி இறப்பை சந்திக்கக்கூடும். சரி, இப்போது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அல்சருக்கான அறிகுறிகள் பற்றிப் பார்ப்போமா!!!

வயிற்றில் வலி

உணவை உட்கொண்ட பின்னரோ அல்லது இரவிலோ வயிற்றின் நடு பகுதியில் அல்லது மேல் பகுதியில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால், அது அல்சர் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

காய்ச்சல்

கடுமையான எரிச்சலுடன் கூடிய வயிற்று வலியைத் தொடர்ந்து காய்ச்சல் சில நாட்கள் இருந்தால், அதுவும் அல்சருக்கான அறிகுறியாகும்.

அஜீரணம்

அல்சர் வந்தால் இரைப்பை குடலில் வலி மற்றும் தொந்தரவுமிக்க அஜீரண கோளாறு ஏற்படும். அதுமட்டுமின்றி, உணவிற்கு பின் ஏப்பம் மற்றும் விக்கல் அடிக்கடி ஏற்படும்.

பசியின்மை

அல்சர் தீவிரமாக இருந்தால், பசியின்மை ஏற்படுவதுடன், கடுமையான வயிற்று வலியை உணரக்கூடும்.

குமட்டல்

செரிமான திரவம் ஏற்றத்தாழ்வுடன் இருந்தால், குமட்டல் ஏற்படும். அதிலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இருந்தால் குமட்டல் ஏற்படும்.

பாரமான அடிவயிறு

அல்சர் இருந்தால், வயிறு பாரமாக இருக்கும். சொல்லபோனால் எப்படி தண்ணீர் அதிகம் குடித்தால் வயிறு நிரம்பியிருக்குமோ, அதேப் போல் வயிறு பாரமாக இருக்கும்.

சொல்லமுடியாத பசி

அல்சர் இருந்தால், உணவை உண்ட சில மணிநேரங்களில் மீண்டும் பசி எடுக்கும். ஏனெனில் செரிமான திரவம் அதிகம் இருப்பதால், உணவு சீக்கிரம் செரிமானமடைந்து, வலியுடன் கூடய பசி எடுக்கும்.

திடீர் உடல் எடை குறைவு

பசியின்மை ஏற்படுவதால், சரியாக சாப்பிடாமல் உடல் எடை குறையக்கூடும். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி வாந்தி எடுத்து, வயிற்றில் எதுவும் இல்லாமல், உடல் எடை திடீரென்று குறையக்கூடும்.

இரத்த வாந்தி

அல்சரின் ஆரம்ப கட்டத்தில் வாந்தி எடுக்கப்படும். அதுவே அல்சர் முற்றியிருந்தால், செரிமான திரவத்தின் அளவு அதிகரித்து, வயிற்றில் மற்றும் குடலில் புண் அதிகமாகி, அந்நேரம் வாந்தி எடுக்கும் போது, இரத்த கலந்த வாந்தி எடுக்கக்கூடும். இந்த நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நிறமாற்ற மலம்

அல்சர் இருந்தால், மலத்தின் நிறம் வேறுபட்டு அடர்த்தியான நிறத்திலோ அல்லது இரத்தம் கலந்த நிறத்திலோ வெளியேறும். முக்கியமாக இரத்தம் கலந்த நிலையில் மலம் வெளிவந்தால், அல்சர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

Related posts

நீங்கள் சத்து மாத்திரைகளை எடுப்பவரா?ஆபத்துக்களைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

nathan

உங்களுக்கு தெரியுமா தர்பூசணி சாறுடன் இத கலந்து குடிச்சா பக்கவாதம், புற்று நோய் வராது!

nathan

gas trouble home remedies in tamil – வயிற்று வாயு பிரச்சினைக்கு

nathan

உயர் ரத்த அழுத்தத்தையும் சீராக்கும் அற்புத மூலிகை பூனை மீசைப் பற்றி தெரிஞ்சுகோங்க!!அப்ப இத படிங்க!

nathan

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

nathan

உங்களுக்கு அடிக்கடி ‘ஏவ்’ வருதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உடலில் சூட்டை போக்க எளிய வழி: பரீட்சித்து பாருங்களேன்.!

nathan

வெளியே சொல்ல முடியாத தர்மசங்கடமான உடல் பிரச்சனைகள்!!!

nathan

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுவது ஏன்?

nathan