மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு மொறுமொறுவென்றும், சூடாகவும் வீட்டிலேயே ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைத்தால் ரிப்பன் பக்கோடா செய்யலாம். இது மிகவும் ஈஸியான ஸ்நாக்ஸ் ரெசிபி. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இங்கு அந்த ரிப்பன் பக்கோடாவின் எளிமையான செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை இன்று செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
கடலை மாவு – 3/4 கப்
மிளகாய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சோடா மாவு – 1/4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 4 சிட்டிகை
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு, நெய் மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Ribbon Pakoda Recipe
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
Ribbon Pakoda Recipe
அதே சமயம் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து பிழிவதற்கு ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Ribbon Pakoda Recipe
எண்ணெயானது சூடானதும், முறுக்கு அச்சில் உள்ள மாவை நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.
Ribbon Pakoda Recipe
பின் அதனை முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
Ribbon Pakoda Recipe
இதேப் போன்று அனைத்து மாவையும் பிழிந்து பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா ரெடி!!!