9df13009
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைக்கு எந்த வயதில் இறைச்சியை கொடுக்கலாம்

பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாதது. காய்கறிகள், பழங்களைவிட இறைச்சி வகைகளில்தான் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் சிறுவயதிலேயே குழந்தைகளை இறைச்சி உணவு வகைகளை சாப்பிட பழக்கலாம். எந்தெந்த வயதில் எந்தவிதமான இறைச்சி வகைகளை சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.

6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு காய்கறிகள், பழங்களை கூழாகவோ, சூப்பாகவோ கொடுக்கலாம். 9 மாதத்திற்கு பிறகு விரும்பினால் அசைவ உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்தலாம்.

முதலில் முட்டையை சாப்பிட வைக்க வேண்டும். அதில் புரதம் மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் உள்பட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது முட்டையில் புரதச்சத்து குறைவாக இருந்தாலும் அது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுவதை முட்டையை வைத்தே பரிசோதித்துக்கொள்ளலாம். முதலில் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். அதனை சாப்பிட பழகிய பிறகு வெள்ளை கருவை கொடுக்க தொடங்கலாம்.

ஒரு வயதை கடந்த பிறகு குழந்தைகளுக்கு மீன், கோழி போன்ற இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சிறிதளவு சாப்பிட கொடுக்கலாம். ஆரம்பத்தில் கோழி இறைச்சியை குழம்பாகவோ, சூப்பாகவோ சாப்பிட கொடுக்க வேண்டும். அதன்பிறகு இறைச்சி துண்டுகளை மிக குறைந்த அளவில் கொடுக்கலாம்.

மீனையோ, இறைச்சியையோ அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை 5 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவைகளில் அதிக அளவில் புரதம் இருக்கிறது என்றாலும் அவை செரிமானத்தில் நெருக்கடியை உருவாக்கும்.

இறைச்சி உணவுகளை சாப்பிட கொடுத்தாலும் இரண்டு வயதுவரை தாய்ப்பாலும் கொடுக்கலாம்.

Courtesy: MalaiMalar

Related posts

மரவள்ளிக்கிழங்கின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?உடனே இத படிங்க…

nathan

துரியன் பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான முறையில் உடற்கட்டை மேம்படுத்துவது எப்படி?

nathan

‘இத’ சாப்பிட்டா உங்களுக்கு கொலஸ்ட்ரால் & இதய நோய் ஏற்படாமல் இருக்குமாம் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! வயிற்றில் கொப்புளங்களை குணப்படுத்த உதவும் 5 உணவு பொருட்கள்!

nathan

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

nathan

ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகள்

nathan

இந்த நேவி பீன்ஸ் சாப்பிட்டிருக்கீங்களா? வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

nathan

பழம் பொரி செய்ய…!

nathan