31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
13 snack gourd kootu
ஆரோக்கிய உணவு

சூப்பரான புடலங்காய் கூட்டு

மதியம் என்ன சமைப்பது என்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியெனில் அதனைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.

சரி, இப்போது அந்த புடலங்காய் கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Snake Gourd Kootu Recipe
தேவையான பொருட்கள்:

புடலங்காய் – 2 கப் (நறுக்கியது)
துவரம் பருப்பு – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் புடலங்காயை உப்பு கொண்டு நன்கு தேய்த்து, நீரில் கழுவி, பின் அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறி மற்றும் தண்ணீர் சேர்த்து, காய்கறி நன்கு மென்மையாக வேகும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

காய்கறியானது நன்கு வெந்ததும், அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் காய்கறியில் இருந்து பச்சை வாசனை போய்விட்டால், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். ஒருவேளை கூட்டு மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கூட்டுடன் சேர்த்தால், புடலங்காய் கூட்டு ரெடி!!!

Related posts

அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க…

nathan

ப்ராக்கோலி பெப்பர் ப்ரை

nathan

ஆரோக்கியத்திற்கு சிறந்த சில மதுபானங்கள் – அட, மெய்யாலுமே தாம்பா!!!

nathan

காலே இலை சாப்பிடுங்கள்!

nathan

சூப்பர் டிப்ஸ் ! நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் தயிரின் முக்கிய பங்கு!!

nathan

உங்களுக்கு தெரியுமா இதய நோய்களைத் தடுக்க உதவும் நிலக்கடலை…

nathan

நம் சமையல் அறையில்…சமைக்கும் முறைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பேரீச்சம்பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம்?

nathan

உங்களுக்கு தெரியுமா மக்காசோளம் சாப்பிட்டு குடிக்கக்கூடாத பழச்சாறுகள் என்னென்ன?..!!

nathan