01 veg biryani
ஆரோக்கிய உணவு

சுவையான வெஜிடேபிள் பிரியாணி

உங்களுக்கு வெஜிடேபிள் பிரியாணியை சிம்பிளாக செய்யத் தெரியாதா? அப்படியானால் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் ஈஸியாக செய்யக்கூடியவாறான வெஜிடேபிள் பிரியாணியின் செய்முறையைக் கொடுத்துள்ளது. மேலும் இது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.

சரி, இப்போது அந்த வெஜிடேபிள் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Simple And Easy Vegetable Biryani
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 கப்
தேங்காய் பால் – 1/4 கப்
தண்ணீர் – 1 3/4 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கிராம்பு – 2
பட்டை – 1/2 இன்ச்
ஏலக்காய – 1
பிரியாணி இலை – 1

காய்கறிகள்…

கேரட் – 2 (நறுக்கியது)
பீன்ஸ் – 6 (நறுக்கியது)
பட்டாணி – 1/4 கப்

அரைப்பதற்கு…

புதினா – 1/4 கப்
கொத்தமல்லி – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அத்துடன் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட், தயிர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் அரிசியை கழுவி போட்டு 1 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி பரிமாறினால், வெஜிடேபிள் பிரியாணி ரெடி!!!

Related posts

தெரிந்துகொள்வோமா? உணவில் மஞ்சள் பொடியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் 14 பக்க விளைவுகள்!!!

nathan

தினமும் இதை ஒரு டீஸ்பூன் அளவு உணவில் சேர்பதால் உண்டாகும் ஆச்சரியங்கள் தெரியுமா?

nathan

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை

nathan

நீரில் இதை 2 சொட்டு கலந்து பாதங்களை ஊற வையுங்கள்….சூப்பர் டிப்ஸ்

nathan

ஆசிய, ஆப்ரிக்கர்களின் ஆரோக்கியத்திற்கு இந்த பால் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

nathan

ஒரே வாரத்தில் எடையை இரு மடங்கு வேகமாக குறைக்கும் அற்புத ஜூஸ்!

nathan

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சுவையான அரைக்கீரை பொரியல்

nathan

பப்பாளி விதையுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுங்க..இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan